ராஜீவ் காந்திக்கு கோபம்.. கேரவனுக்குள் ஒளிந்து படம் காட்டும் விஜய்! தொண்டனை சித்ரவதைப்படுத்தி மாநாடா
சென்னை: விஜய் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த உயிரிழப்பு மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி வரும்நிலையில், வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் கொடுக்காது, இளைப்பாறக் கூடாரம் போடாது, தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி, சாமானிய தொண்டனைச் சித்ரவதைப்படுத்தி மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய் என்று திமுக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
விஜய் தலைமையில் மதுரையில் மாநாடு நடைபெற்றது.. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு சுமார் 8 மணி வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநாட்டு திடலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

தவெக மாநாடு - 2 பேர் பலி
அந்தவகையில், தவெக மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் இருந்து மதுரைக்கு வந்த பிரபாகரன் (வயது 33) என்ற இளைஞர் மதுரை வந்துகொண்டிருந்தார்.. சக்கிமங்கலம் அருகே இயற்கை உபாதை கழிக்க வாகனத்திலிருந்து கீழே இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதே போல மாநாட்டிற்கு வந்த மேலும் ஒரு இளைஞர் நேற்று உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (வயது 18) என்ற இளைஞர் மாநாட்டுத் திடலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த தொண்டர்கள்
முன்னதாக மதுரை தவெக மாநாட்டிற்காக விருதுநகரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை வரவேற்று பேனர் வைக்கும் போது காளீஸ்வரன் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்றைய தினம் 2 பேர் உயிரிழந்தது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழகத்தில் உண்டாக்கி வருகிறது.
இந்நிலையில், வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் கொடுக்காது, இளைப்பாறக் கூடாரம் போடாது, தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி, சாமானிய தொண்டனைச் சித்ரவதைப்படுத்தி மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய் என்று திமுக ராஜீவ் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
குடிக்க தண்ணீர்
திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: "சேலத்தில் 5 லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்கு பந்தல் போட்டு அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் பேசினாலும், அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும், உண்ண சைவ, அசைவ உணவும் கொடுத்து புகைப்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும் வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் எங்கள் உதயநிதி ஸ்டாலின்.
கேரவனுக்குள் ஒளிந்து
வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் கொடுக்காது, இளைப்பாறக் கூடாரம் போடாது, தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி, சாமானிய தொண்டனைச் சித்ரவதைப்படுத்தி மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய். தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள், தியேட்டர் இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால் இந்த ரசிகர்கள் கூட்டம் உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும் சுயநலம் நடிகர் விஜய்" என்று பதிவிட்டிருக்கிறார்.
திமுகவின் இந்த விமர்சனத்துக்கு, தவெகவினர் திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications