வேட்புமனுவிற்கே சிக்கல்.. விஜய்க்கு சங்கீதாவால் வந்த பெரிய சிக்கல்.. வழக்கறிஞர் சொன்ன லீகல் பாயிண்ட்
சென்னை: விஜய்க்கு இப்போதும் சங்கீதாதான் மனைவி. அவர் வேட்புமனு தாக்கல் செய்தால் சட்டப்படி மனைவியின் விவகாரங்களைத்தான் கொடுக்க வேண்டும். விவாகரத்து வாங்கும் வரை மனைவி என்றுதான் கூற வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை மனைவி சங்கீதாதான் என்று குடும்ப நல வழக்கறிஞர், சுந்தர பாண்டிய ராஜா பேட்டி அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.
விஜய் வழக்கறிஞர் பேட்டி
இது தொடர்பாக குடும்ப நல வழக்கறிஞர், சுந்தர பாண்டிய ராஜா அளித்துள்ள பேட்டியில், அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பொது விஷயங்களை விவரிக்க முடியாது. அதை பற்றி பேச முடியாது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது மனைவியின் விவரங்களை காட்ட கூடாது என்பதற்காக இப்படி செய்கிறாரா? வருமானத்தை மறைக்க இப்படி செய்கிறாரா? என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர் பப்ளிக் சர்வெண்ட் கிடையாது. அதானல் அவர் சொத்தை மறைக்க இப்படி செய்கிறார் என்று சொல்ல முடியாது.
அவர்கள் விவாகரத்து செய்ய தனிப்பட்ட காரணங்கள்தான் இருக்கும். சொந்த காரணங்களால்.. சொந்த சுதந்திரம் காரணமாக இவர்கள் விவாகரத்து செய்யலாம். தனிமனித சுதந்திரத்தை கெடுத்துக்கொண்டு வாழ வேண்டமா என்று நினைத்துக்கொண்டு இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் .. அரசியல் தலைவர்களால் அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. அதுவே கூட குடும்ப பிரச்சனைகளுக்கான காரணமாக அமைந்திருக்கும்.
விஜய்க்கு இப்போதும் சங்கீதாதான் மனைவி. அவர் வேட்புமனு தாக்கல் செய்தால் சட்டப்படி மனைவியின் விவகாரங்களைத்தான் கொடுக்க வேண்டும். விவாகரத்து வாங்கும் வரை மனைவி என்றுதான் கூற வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை மனைவி சங்கீதாதான். சங்கீதாவின் சொத்து விவரங்களை அவர் கொடுத்தே ஆக வேண்டும். அவர் தன்னை பிரிந்து வாழ்கிறோம் என்று சொல்லலாம்.. ஆனால் சட்டப்படி அவர் வேட்புமனுவில் மனைவி என்றே குறிப்பிட வேண்டும், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications