Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீருடன் ஆறுதல் சொல்லும் விஜய்.. கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிகழ்வில் 37 குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் கண்ணீருடன் ஆறுதல் தெரிவித்துள்ளார் விஜய். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மாமல்லபுரத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ மூலம் ஆறுதல் கூறிய விஜய், நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.

Vijay TVK karur

ஆனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் கூறப்படும் நிலையில், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று தவெக த்லைவர் விஜய் சந்திக்கிறார்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தங்களது கார்களில் நேற்று காலை முதலே பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை கரூர் அழைத்து வந்தனர். அங்கிருந்து 5 பேருந்துகளுக்கு பூஜை போடப்பட்டு, அதில் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் உள்ளிட்டோரும் சென்னை வந்தடைந்தனர்.

இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார் விஜய். இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி தவெக சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது.

கரூர் துயரச் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு அதாவது அக்டோபர் 27ஆம் தேதியான இன்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறுகிறார். இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பிய விஜய் மாமல்லபுரம் ரிசார்ட்டுக்கு வருகை தந்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில் அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுபாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளையும் விஜய் எழுத்துபூர்வமாகயும் பெறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+