தமிழக அரசே விசாரித்து இருக்கலாம்.. CBI போனது சிக்கலாகிடுச்சு.. விசாரணைக்கு பின்.. புலம்பிய விஜய்?
சென்னை: நெருக்கமான சில உறவினர்கள் , நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே கரூர் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது.. என்னை தேவையின்றி கோர்த்துவிட்டு விட்டார்கள் என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.
கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை சூடுபிடித்து உள்ளது. இந்த விசாரணையின் ஒரு கட்டமாக நேற்று விஜய் விசாரணை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டார்.

இந்த விசாரணையில் விஜயிடம் பல முக்கியமான விஷயங்கள் கேட்கப்பட்டன. 100 கேள்விகள் அவரிடம் கொடுக்கப்பட்டது. அதில் டிக் அடிக்கும் வகையில் முதலில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பின் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளித்தார்.
அதன்பின் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. விஜய் தொடர்ந்து அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில்களை அளித்தார்.
இதில் விஜயிடம்.. நீங்கள் ஏன் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்தீர்கள்? கூட்டம் அதிகமாக இருந்தும் கூட நீங்கள் ஏன் பேச்சை தொடர்ந்தீர்கள்? நீங்கள் சம்பவ இடத்தில் போலீஸ் சொன்னதை கேட்டீர்களா? போலீஸ் உங்களிடம் கேட்ட சில விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையா? உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்ட நேரம் என்ன? நீங்கள் பேசிய நேரம் என்ன? என்று பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு எல்லாம் விஜய் பெரும்பாலும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை, தமிழக அரசு கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை, தமிழக அரசு மக்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரவில்லை என்று மட்டுமே பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் கோபம்
இந்த நிலையில்தான் சிபிஐ விசாரணை காரணமாக விஜய் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு விசாரணை நடத்தி இருந்தால் நமக்கு இவ்வளவு நெருக்கடி இருக்காது. தமிழக அரசு ஒவ்வொரு முறை நம்மை விசாரணைக்கு அழைத்தாலும் அது நமக்கு மைலேஜ்தான். நம்மை தொந்தரவு செய்கிறார்கள்.. துன்புறுத்துகிறார்கள் என்று மைலேஜ் தேற்றி இருக்கலாம்.
விஜய் புலம்பல்
அதோடு விஜய் மீது கைவைத்து இருக்க மாட்டார்கள். அவரை விசாரணைக்கு அழைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இங்கே நிலைமை வேறு மாதிரி உள்ளது. சிபிஐ இதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. விஜயை தொடும் திட்டத்திலேயே சிபிஐ காய் நகர்த்தி வருகிறது. இதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு விசாரணையாக இருந்தால்.. இதை விபத்து என்று கூட முடித்திருப்பார்கள்.
இனி டெல்லி தன்னை காலம் முழுக்க இந்த வழக்கை வைத்து கரம் கட்ட திட்டமிடும் என்று விஜய் நினைக்கிறாராம். இதை கட்சியில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் சொல்லி விஜய் புலம்பி இருக்கிறாராம். நெருக்கமான சில உறவினர்கள் , நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.
தமிழக அரசு விசாரணை செய்திருந்தால்.. நமக்கு இவ்வளவு பிரஷர் ஏற்பட்டு இருக்காது என்றும் விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications