தவெக "தோழர்களுக்கு" விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.. இரவோடு இரவாக எல்லாம் மாறிடுச்சே.. அடிச்சு ஆடுறாரே!
சென்னை: நடிகர் விஜய் தான் தொடங்க இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடர்பாக முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். இரவோடு இரவாக அவர் எடுத்த நடவடிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சி விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாம். இந்த நிலையில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை விஜய் பிறப்பித்துள்ளாராம்.

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் விஜய் சார்பாக முதலில் விஜய் மக்கள் இயக்கம்.. விஜய் மக்கள் கட்சி என்று மாற்றப்படும் திட்டத்தில் இருந்தது. ஆனால் அது சரியாக இல்லை என்பதால்.. தமிழக மக்கள் கட்சி என்று உருவாக்கும் திட்டம் இருந்தது.
தமிழக மக்கள் கட்சிதான் கடந்த வாரம் வரை இருந்தது. இந்த பெயர் கூட இணையத்தில் கசிந்தது. பெயர் கசிந்த காரணத்தால்.. விஜய் அப்போதே அப்செட் ஆனதாக கூட கூறப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் இந்த பெயரை கடைசியில் வேண்டாம் என்று நீக்கி உள்ளனர். அதற்கு காரணம் அதன் ஆங்கில சுருக்கம். தமிழக மக்கள் கட்சி என்பதை சுருக்கினால் TMK என்று வரும்.
அப்படி வந்தால் அது DMK என்பதை போலவே சத்தம் வரும். கிராமங்களில் வேறுபடுத்தி காட்டுவது கடினம். இதன் காரணமாகவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வெற்றிபெறும்.. தமிழ்நாட்டை வெற்றிபெற வைக்கும் கட்சி என்பதை உணர்த்தும் விதமாக.. தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது
முக்கியமான உத்தரவு: நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சி விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாம். இந்த நிலையில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை விஜய் பிறப்பித்துள்ளாராம்.
அதன்படி விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள், தமிழக வெற்றி கழகத்தின் செயலாளர்களாக இருப்பர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் அவர்கள் நடிகர் சங்க மாவட்ட தலைவர்கள் கிடையாது. மாறாக.. அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் என்ற பொறுப்பில் இருப்பார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இரவோடு இரவாக சென்ற இந்த செய்தி காரணமாக விஜய் ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாட்களில் மேலும் சில பதவிகள் இதேபோல் நிரப்படும் என்பதால் விஜய் ரசிகர்கள் தங்களுக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கட்சி தொடங்கிய சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்களும் ஏக மகிழ்ச்சியில் உள்ளனராம்.
முக்கிய உத்தரவு: கட்சி பணிகளை நிர்வாகிகள் தொடங்கிய நிலையில். இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளாராம். இணையத்தில் கட்சியை சிலர் கிண்டல் செய்யும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறாராம்.
அதேபோல் குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும். 2024 தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என்று விஜய் தனது கட்சி "தோழர்களுக்கு" உத்தரவிட்டுள்ளாராம்.
-
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய்











Click it and Unblock the Notifications