“சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் எம்ஜிஆர்".. விஜய் வெளியிட்ட பதிவு! பின்னாலேயே வந்த தவெக தலைகள்
சென்னை: தவெக தலைவர் விஜய், கட்சி கூட்டங்களில் எம்ஜிஆர் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி புகழ்வணக்கம் செலுத்தி உள்ளார். "சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளை அதிமுகவினர் கட்சிக் கொடியேற்றியும், நலத் திட்ட உதவிகள் வழங்கியும், கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், தவெக உயர்மட்டக் குழு மாநில ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் வெளியிட்ட பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி, தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மகத்தான தலைவர், சத்துணவு தந்த சரித்திர நாயகர், இதய தெய்வம், பாரத ரத்னா, டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பிறந்தநாளில், புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினோம். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கொடிய வறுமையும், நெடிய சவால்களும் வாழ்வை சூழ்ந்தபோதும் கொண்ட லட்சியத்தைக் கைவிடாமல் சரித்திர நாயகராகப் புகழ்பெற்றவர். மக்கள் கலைஞராக இருந்து மக்களின் தலைவராக எழுச்சி கண்டவர். சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி. ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர்.
பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியவர். பரம்பரை பரம்பரையாக ஒருசிலரிடம் இருந்த கிராம உள்ளூர் நிர்வாகத்தை மாற்றி, 'கிராம நிர்வாக அலுவலர்' (VAO) என்ற அரசு அலுவலர்களை உருவாக்கி சமூகநீதியை நிலைநாட்டியவர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்கள் மனதில் வேரோடி நிற்பவர் யார்?
109 ஆவது பிறந்த நாளிலும் தமிழ்நாட்டின் வீதிக்கு வீதி பட்டி தொட்டிகள் எல்லாம் மக்களால் தன்னிச்சையாக வணங்கப்படும் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். 1977 இல் நீங்கள் உருவாக்கிய வரலாற்றை உங்கள் அடிச்சுவட்டில் மீண்டும் தமிழ்நாட்டில் தளபதி, வெற்றிக் கழகத் தலைவர் தலைமையில் உருவாக்க உறுதி ஏற்கிறோம். வணங்கி வாழ்த்துகிறோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications