தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள்
கன்னியாகுமரி: குமரியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை கொண்டு வரும் என்பது குறித்து பேசினார். அப்போது, "மாநில வளர்ச்சிக்காக 'மை வெற்றி தமிழ்நாடு' என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்றும், தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும். ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்" என்று விஜய் பேசினார்.
மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும் என்றும், 10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.

விஜய் தேர்தல் வாக்குறுதி
குமரியில் இன்று பரப்புரை செய்த விஜய் சில வாக்குறுதிகளை அளித்தார். விஜய் கூறியதாவது:-
* லஞ்சம் இல்லாமல் அரசின் ஒவ்வொரு நலத்திட்டமும் வீடு தேடி வரும்.
* மாநில வளர்ச்சிக்காக 'மை வெற்றி தமிழ்நாடு' என்ற இணையதளம் உருவாக்கப்படும். இதன் மூலம் அனைத்து சேவைகளும் மொபைலில் கிடைக்கும்.
* இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழ்நாட்டில் ஏஐ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
ஏஐக்கு தனி அமைச்சகம்
* செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
* தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.
* ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.
* இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும்.
* மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும்.
சட்டசபையில் விவாதிக்கப்படும்
*10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும்.
* 5 லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அது குறித்து விவாதிக்கப்படும்.
* பொதுமக்களும் அரசுக்கு யோசனை வழங்கலாம்.
* ஆண்டு மீன்பிடி தடை காலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* படகு பாதுகாப்பு நிதி: படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடக்கும் வரை வங்கி கடன்களை திருப்பி செலுத்தவும் மீனவர்களின் குழுவுக்கு ஆதரவு அளிக்கவும் படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் உடனடி இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
வீட்டு வசதி திட்டம்
* கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும் சிதிலம் அடைந்த குடியிருப்புகளையும் மாற்றி புயல்களை தாங்க கூடிய காலநிலை மாற்றத்தை தாங்குவதற்கான குடியிருப்புகளை கட்ட தனி வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்படும்.
* இயந்திர படகுகளுக்கான மாதாந்திர டீசல் மானிய ஒதுக்கீட்டை ரூ.1,800-ல் இருந்து ரூ.3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் என்ற நிலையான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்” என்று கூறினார்.
-
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications