Karur Stampede: 3 மணி நேரத்திற்கு பிறகு விஜய்க்கு நொறுங்கிய இதயம்! ஆற அமர நீலாங்கரை வீட்டில் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் தவெக பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் அவசர அவசரமாக புறப்பட்டு சென்னை சென்ற நிலையில் சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்து "இதயம் நொறுங்கி போயிருக்கிறேன்" என விஜய் ட்வீட் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் இவரெல்லாம் அரசியல்வாதியா என்ற கேள்வியையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சம்பவம் நடந்த சில நேரத்திலேயே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கூட தங்களது இரங்கல் செய்திகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிட்டனர். ஆனால் விஜய்யோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் சென்னை விமான நிலையத்திலும் டிமிக்கிக் கொடுத்துவிட்டு நீலாங்கரை வீட்டிற்கு போய்விட்டார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு விஜய் கடந்த 13 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவர் அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்தார்.

karur vijay

அது போல் கடந்த 20 ஆம் தேதி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்றைய தினம் நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே பேச அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால் 8.45 மணிக்குத்தான் அவர் சென்னை வீட்டிலிருந்தே புறப்பட்டுள்ளார். இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த அவர் மேய்க்கல்நாயக்கன்பட்டியில் காரில் இருந்து பேருந்து மூலம் அவர் நாமக்கல் சென்றார். கிட்டதட்ட குறைந்த தூரத்தை அவர் கடக்க பல மணி நேரம் ஆகி மதியம் 2.45 மணிக்குத்தான் நாமக்கல் சென்றார்.

அதுவரை காலை முதலே தொண்டர்களும் ரசிகர்களும் விஜய்யை பார்க்க கூடியிருந்த நிலையில் விஜய் தாமதமாக வந்திருந்தார். இதனால் பலர் சாப்பிடாமல் காத்திருந்தனர். இதனால் பெண்கள் உள்பட பலர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அங்கிருந்து அவர் 3.45 மணி போல் கரூர் புறப்பட்டு சென்றார். அங்கும் வழிநெடுகிலும் இருந்த கூட்டத்தை கடந்து செல்லவே அவருக்கு மாலை 6.30 மணி ஆகிவிட்டது. இந்த நிலையில் 100 அடி சாலையில் விஜய்யை பார்க்க ஏராளமானோர் காத்திருந்த நிலையில் அவருடைய 60 அடி கொண்ட பஸ் அந்த கூட்டத்தில் புகுந்த போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

இதில் மூச்சுத்திணறி 29 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசமான நிலையில் உள்ளவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் கரூரில் எங்கு பார்த்தாலும் அலறல் சப்தங்களும் ஆம்புலன்ஸ்களின் ஹாரன்களும் கேட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji , மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma
அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

karur vijay

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh
அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி கரூரே சோகத்தில் இருக்கும் நிலையில் விஜய் மருத்துவமனைக்கு கூட செல்லாமல் அவசர அவசரமாக தப்பியோடுவது போல் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று சென்னை விமான நிலையத்திற்கும் சென்றுவிட்டு தற்போது வீட்டிற்கே சென்றுவிட்டார். எப்போதுமே ட்விட்டரில் அரசியல் செய்து வந்த விஜய் தற்போது இந்த துயர சம்பவம் குறித்து ட்வீட் கூட போடவில்லை என விமர்சனமாக இருந்தது. இந்த நிலையில் விஜய்யோ சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்து ஆற அமர, "இதயம் நொறுங்கியிருக்கிறது" என ட்வீட் போட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+