"நம்ம ரேஞ்ச் என்னன்னு தெரியுமா?" டிடிவி தினகரனுடன் டீலிங் பேசிய அருண்ராஜ்? கொந்தளித்த விஜய்!
சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தவெக மாநில நிர்வாகி அருண்ராஜை, தலைவர் விஜய் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக விஜய் மனதில் இடம் பிடித்துள்ள அருண்ராஜ் இது போன்றதொரு காரியத்தை செய்தது விஜய்க்கு வருத்தமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தவெக விஜய் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல்வராக வேண்டும் என அவரும் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இதற்காக தவெக தலைமையில் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார். மேலும் ஆட்சியில் பங்கு என்ற கோட்பாட்டையும் அவர் இசைவு தெரிவித்துள்ளார்.
23 சதவீத வாக்குகள்
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அது திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அது போல் ஓபிஎஸ்ஸிடம் கேட்ட போது எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
பெரிய தாக்கம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் தேர்தலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் அவரது கட்சி 2 ஆவது இடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார். மேலும் தவெக விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். எந்தெந்த கட்சிகள் அந்த கூட்டணிக்கு வரும் என்பது விரைவில் தெரியும் என தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
மேலும் விஜய் கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்றும் தினகரன் தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யிடம் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்குமாறு டிடிவி தினகரன் கேட்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
விஜய்யுடன் கூட்டணி
இப்படி விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் போட்டி போடும் நிலை உள்ளது. அதிலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகும் விஜய்க்கான மவுசு குறையவில்லை என்கிறார்கள். இந்த நிலையில் அமமுகவுடன் தவெக நிர்வாகி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருண்ராஜ் யார்
ஐஆர்எஸ் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர் அருண் ராஜ். இவருக்கு கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு இணையாக அருண் ராஜுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதாம்.
உச்சநீதிமன்றம்
அதிலும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ததால் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். தமிழக அரசின் ஒரு நபர் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞரை தேடி ஆதவ் அர்ஜுனாவும் டெல்லியில் முகாமிட்டிருந்தார்.
விஜய்க்கு தெரியாமல்
இதனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லாமல் இருந்த போது விஜய்க்கு அருண் ராஜ்தான் உறுதுணையாக இருந்தாராம். இந்த நிலையில் அவர் விஜய்க்கே தெரியாமல் அமமுக பொதுச் செயலாளர் தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
கோபப்பட்ட விஜய்
இது குறித்த தகவல் விஜய்க்கு தெரியவந்தது. உடனே விஜய் கோபப்பட்டாராம். அருண் ராஜை அழைத்து பேசியுள்ளார். அப்போது அவரிடம், "தினகரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த யாரை கேட்டுவிட்டு சென்றீர்கள், தவெக யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது தனிநபரான நீங்கள் இல்லை.
கண்டிப்பு
ஒட்டுமொத்த கட்சியும்தான். அவர்களது கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை நான் எடுப்பேன். அதுவரை யாரும் அவசரப்பட்டு எந்த கட்சியுடனும் கூட்டணி பேச வேண்டாம். உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது, கட்சியின் இமேஜை கெடுக்க வேண்டாம். நீங்கள் மட்டுமில்லை, இது போல் எனக்கு தெரியாமல் யாரும் யாரிடமும் பேச வேண்டாம் என அருண் ராஜை விஜய் மிகவும் கண்டித்தாராம்.
-
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி!











Click it and Unblock the Notifications