தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற இருந்த விஜய்யின் தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் தனது பரப்புரையை ரத்து செய்வது இது முதல்முறை கிடையாது. ஆனால் தொடர்ந்து பரப்புரை ரத்து செய்யப்படுவது, தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

Vijay

வேட்பாளர் அறிமுகம்

வழக்கமாக கட்சியின் தலைவர், வேட்பாளர்களை அறிவிக்கிறார் எனில், அவர் போட்டியிடும் தொகுதிக்கு சென்று, இந்த நபர், இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.. எனக்கு வாக்களிப்பதாக நினைத்து, இந்த நபரை வெற்றி பெற வையுங்கள் என்று அறிமுகப்படுத்துவது வழக்கம். முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் வேட்பாளர்களை இப்படித்தான் அறிமுகப்படுத்தினர்.

உப்பு சப்பில்லாத நிகழ்ச்சி

ஆனால், விஜய் நட்சத்திர ஓட்டலில் வைத்து வேட்பாளர் அறிமுகத்தை சிம்பிளாக முடித்துக்கொண்டார். சரி வேட்பாளர் அறிமுகம்தான் இப்படி உப்பு சப்பில்லாமல் போய்டுச்சு.. பிரச்சாரத்திற்கு வந்து நம்மை பற்றி பேசுவார் என்று வேட்பாளர்கள் விஜய்யை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அங்கும் வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சியது.

பரப்புரையை எதிர்பார்க்கும் நிர்வாகிகள்

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள்தான் இருக்கின்றன. 14 நாட்களில் எப்படி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முடியும்? அப்படியெனில் ஒரு நாளைக்கு 16 தொகுதிகளில் போய் பேச இருக்கிறாரா விஜய்? என்று நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்தனர். அங்குதான் விஜய் ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அதாவது, விஜய் தனது பரப்புரையை தொடர்ந்து ரத்து செய்து வருகிறார்.

ஏன் ரத்து?

இன்று வில்லிவாக்கம், தி.நகரில் பரப்புரை செய்ய இருந்தார். ஆனால், போதுமான நேரம் வழங்கவில்லை என்று கூறி விஜய் தனது பரப்புரையை ரத்து செய்திருந்தார். வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்கு ஒரு மணி நேரத்தில் போக முடியாதாம். எனவே பரப்புரையை ரத்து செய்தாராம். வில்லிவாக்கம்-தி.நகர் 1 மணி நேரம் பயணம் சாத்தியமே! இருந்தும் விஜய் தனது பரப்புரையை ரத்து செய்தார்.

நாளைய பரப்புரையும் ரத்து

அதேபோல நாளை சைதாப்பேட்டையில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். அதுவும் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை போன்ற இடங்கள் எல்லாம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. இங்கு 15 நிமிடம் பிரச்சாரம் செய்தாலே போக்குவரத்து ஸ்தம்பித்து மக்கள் டென்ஷனாக தொடங்கிவிடுவார்கள்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் 1 மணி நேரம் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த நேரம் போதாது என்று விஜய் சொல்வது ரொம்ப ஓவர் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+