“கூடிக் கலையும் கூட்டத்தை நம்பி அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்.. ஓட்டாக மாறுமா?”.. ராஜகம்பீரன் பேட்டி
சென்னை: "இரண்டாம் கட்ட தலைவர்களும், சித்தாந்த வலிமையும் இல்லாத ஒரு இயக்கம் கரைசேராது என்பதற்கு ஒரு சமகால உதாரணம் விஜயகாந்த். விஜய்க்கு எங்கு அரசியல் இருக்கிறது என்றே தெரியவில்லை." என மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மதுரையில் நடத்திய மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். இந்தக் கூட்டம் விஜய்க்கு தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறுமா என்ற பெரும் விவாதம் அரசியல் அரங்கில் நடந்து வருகிறது.

அரசியல் விமர்சகர் பேட்டி
இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "நான் பக்கா திமுககாரன்.. அதிமுக காரன்.. நான் வேறு கரை வேட்டி கட்ட மாட்டேன் என்ற வைராக்கியம் சித்தாந்த வலிமை கொண்ட கட்சிகளின் தொண்டர்களுக்குத்தான் இருக்கும். அந்த வைராக்கியத்தை உருவாக்காத அரசியல் கட்சிகள் கால வெள்ளத்தில் கரையேற முடியாது.
திரையில் பார்க்கிற நட்சத்திரத்தை தரையில் பார்க்கும்போது வியப்பு தீர்ந்துவிடும். இந்த மதுரை மாநாட்டிலேயே விஜய் ராம்ப் வாக் நடந்து சென்றபிறகு ஒரு கூட்டம் கலைந்து சென்றுவிட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருமண விழாவின்போது விஜயகாந்த் கள்ளக்குறிச்சி சென்றபோது அவருக்கு கிடைத்த வரவேற்பும் மக்கள் திரட்சியும் தான் அவர் கட்சி தொடங்கவே காரணமாக இருந்தது. அதன் பிறகு அவ்வளவு பெரிய கூட்டம் திரண்டது அவரது இறுதி ஊர்வலத்துக்குத்தான்.
நயன்தாரா வந்தால் கூட
நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தால் கூட லட்சக்கணக்கில் ஆட்கள் திரள்கிறார்கள். அறிவிக்கப்படாமல் கூடுகின்ற பல கூட்டங்கள் இப்படி உண்டு. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்னை மெரினாவில் எத்தனை லட்சம் பேர் திரண்டார்கள்? அவர்களில் ஒருவராவது அப்படி ஒரு மக்கள் போராட்டத்தை திரட்டும் சக்தி கொண்ட தலைவர்களாக மாறினார்களா?
ஆனால், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்றைக்கு மாணவர்களாக இருந்தவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு போல தகவல் தொடர்பு இல்லை. கருணாநிதி, கட்சி தொண்டர்களுக்கு தனது கைப்பட கடிதம் எழுதினார். அவர்கள் இன்று தலைவர்களாக நிலைபெற்றிருக்கிறார்களா? ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களா?
கரைசேர முடியாது
அரசியலில் வரலாறு தெரியாமல், தத்துவம் தெரியாமல், சித்தாந்தம் தெரியாமல் அடியெடுத்து வைக்கலாம், ஆனால் கரைசேர முடியாது. தெரியாத இடத்துக்கு போகும்போது பின் சீட்டில் வழி தெரிந்தவர் இருக்க வேண்டும். இல்லையென்றால் கூகுள் மேப் ஆவது இருக்க வேண்டும். கொள்கை என்பது கூகுள் மேப் மாதிரி. வழி தெரியவேண்டாம் என இஷ்டத்துக்கு போக முடியாது.
விஜயகாந்த் கட்சி 2011 சட்டசபை தேர்தலில் 10% வாக்குகளைக் கடந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் 1% கூட இல்லை. இந்த வீழ்ச்சி ஏன்? எம்ஜிஆர் மறைந்தாலும் அவரது கட்சி மறையவில்லை. எவ்வளவு டேமேஜ் ஆனபிறகும் எடப்பாடி பழனிசாமி 20% அதிமுக வாக்குகளை வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு டேமேஜ் விஜயகாந்த்துக்கு நடக்கவில்லை. ஆனாலும் ஏன் தேமுதிகவின் வாக்கு 10% காணாமல் போனது எப்படி?
கட்சி நடத்த முடியாது
இரண்டாம் கட்ட தலைவர்களும், சித்தாந்த வலிமையும் இல்லாத ஒரு இயக்கம் கரைசேராது என்பதற்கு ஒரு சமகால உதாரணம் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு நிகரான சித்தாந்த வலிமை கொண்டவர் அல்ல. ஆனால், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன் என ஒரு வலிமையான படையையே வைத்திருந்தார்.
விஜய்க்கு எங்கு அரசியல் இருக்கிறது என்றே தெரியவில்லை. சினிமா தியேட்டரில் கூடுவது போல கூடி பின் கலைந்து செல்பவர்களை நம்பி ஒரு கட்சியை நடத்திவிடலாம் என நினைக்கிறார். ரசிகர் மன்ற கூட்டத்தையே அரசியல் மாநாடு என நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டம் வருவது மட்டுமே ஒருவருக்கான அடையாளம் என்று இல்லையே.. இது அப்படி வெற்றியை அடையும்?
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்











Click it and Unblock the Notifications