Vijay Ex Manager: திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார்!
சென்னை: விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார், திமுகவில் இணைந்தார். இவர் புலி படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர். கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.

விஜய் கட்சிக்கு செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், நடிகர் ரவி உள்ளிட்டோர் இணைந்த நிலையில் தற்போது விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளார்.
சுறா, வில்லு போக்கிரி ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றியவர். கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
பி.டி.செல்வக்குமார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட! இவர் பத்திரிகையாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இணைந்தார்.
இதையடுத்து அவர் விஜய்யின் மக்கள் நல அலுவலராக பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு டி.பி.கஜேந்திரனின் "பந்தா பரமசிவம்" படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் செல்வக்குமார்.
2012 ஆம் ஆண்டு நகுல், சிவா, சந்தானம், பிரேம்ஜி, பிரியாமணி ஆகியோரை கொண்டு ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த படம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து வினய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், சத்யன், பிரேம்ஜி, ராய் லட்சுமி ஆகியோரை வைத்து 2013 ஆம் ஆண்டு "ஒன்பதுல குரு" என்ற படம் இயக்கப்பட்டது.
ஆனால் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் 2015 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கிய "புலி" படத்திற்கு தயாரிப்பு பணிகளில் செல்வக்குமார் பணியாற்றினார்.
புலி படத்தின் தோல்வியால் செல்வக்குமார் தனிப்பட்ட முறையிலும் தோல்விகளை தழுவினார். அவரால் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு "போக்கிரி ராஜா" என்ற படத்தை ரிலீஸ் செய்தார்.
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடிகர் விவேக் பிறந்தநாளையொட்டி, "கலப்பை மக்கள் இயக்கம்" சார்பாக பிடி.செல்வக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதற்கு என்னுடைய பங்கும் உள்ளது. நட்சத்திரம் விஜய்தான். ஆனால் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் நீண்ட காலம் பயணிக்க முடிந்தது. இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். இவ்வாறு பி.டி.செல்வக்குமார் தெரிவித்தார்.
இவர் "வசீகரா", "மதுர", "கஜினி", "ஆதி", "போக்கிரி", "ஆழ்வார்", "படிக்காதவன்" (தனுஷ்), "அழகிய தமிழ்மகன்", "வேல்", "வில்லு", "வேட்டைக்காரன்", "சுறா", "காவலன்" உள்ளிட்ட படங்களில் பிஆர்ஓ-வாக இருந்துள்ளார். "நாட்டாமை", "விஷ்ணு", "கோயமுத்தூர் மாப்பிள்ளை", "ஜெயில்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். "பந்தா பரமசிவம்", "ஒன்பதுல குரு" படங்களை இயக்கியும் "புலி", "போக்கிரி ராஜா" படங்களை தயாரித்துள்ளார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய் -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா?












Click it and Unblock the Notifications