Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்காக விட்டுக் கொடுத்து இருக்காரு என தவெக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் விஜய் சொன்ன வார்த்தை வைரலாகி வருகிறது. உடனே அங்கிருந்த நிர்வாகிகள் ஆர்ப்பரித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் விஜய் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தினார்.

vijay perambur

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விழாவில் விஜய் பேசுகையில், இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் என சொன்னார்கள்.

ஆனால் என்னை பொருத்தமட்டில் மக்களை காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பம். பெரிய பேக்கிரவுண்ட் இல்லை என சொல்வார்கள். கூட்டம் சேர்ந்தால் ஓட்டாகுமா, சீட்டாகுமா என்றெல்லாம் கேட்பார்கள். இங்கு இருப்போர் சாதாரண குடும்பத்தினர் அல்ல, அரசியல் தெரிந்தவர்கள்தான்.

எனவே அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள் கிடையாது. எம்எல்ஏன்னா சும்மா இல்லை. எல்லை காப்பானாக இருக்க வேண்டும். எம்எல்ஏ என்றால் தொகுதிக்கான எல்லைக்கான மக்கள் காப்பாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைதான் நான் தேர்வு செய்துள்ளேன்.

களத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய ஆட்களை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். எல்லாம் இடத்திலும் நான் செல்ல முடியாதுல்ல. நானே பார்த்து பார்த்து வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளேன்.... மக்களே இவர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. நம்மளுடைய அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அவர்களை வேட்பாளராக ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

கூட்டம் ஒட்டா மாறதா என்று கேட்கிறார்கள். இந்த தேர்தல் எல்லாரும் சொல்லும் தேர்தல் கிடையாது. இது இருமுனை போட்டி மட்டும்தான். ஒன்னு இந்த மக்கள் கூட்டணியான டிவிகே, இன்னொன்று ஸ்டாலின் சார் கூட்டணி.

கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் கூச்சல் சத்தம் முடியவில்லை. விஜய்க்கெல்லாம் என்னப்பா செல்வாக்கு இருக்கு, கூட்டத்தை வச்சி சொல்றீங்களா? அதெல்லாம் வேடிக்கை பார்க்க வரக்கூடிய கூட்டம் கூட்டம் வந்தால் பெரிய ஆளா, கூட்டம் ஓட்டா மாறுமா, ஓட்டு சீட்டா மாறுமா என வன்மத்தோடு கேள்வி கேட்கிறார்கள்.

இந்த தேர்தல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

வாக்குறுதிகள் அறிவிப்பு இளைஞர்களுக்காக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறேன். போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும். 12 ஆம் வகுப்புக்கு பிறகு பி.ஹெச்.டி வரை பிணையம் இல்லாமல் (Collateral Free) 20 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும். இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

மேலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் ஒவ்வொரு வேட்பாளர்களையும் பொறுமையாக அறிவித்தார். அப்போது அந்த வேட்பாளர்கள் செய்த வெற்றி சமிக்ஞை, ரஞ்சிதமே நடன சமிக்ஞை, பறக்கும் முத்தம் உள்ளிட்டவைகளை விஜய்யும் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில் தனது ஓட்டுநர் மகனுக்கு சீட் கொடுத்து அவர்களை நெகிழ வைத்தார். நிகழ்வில் சம்பந்தமே இல்லாமல் (வேட்பாளரல்லாத) ஒருவரை விஜய் அழைத்தார். அப்போது "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு, கவலைப்படாதீங்கள் உங்கள் சிவாவை நான் நல்லா பார்த்துக்குவேன்" என அவர் தோளில் கை போட்டுக் கொண்டு விஜய் அறிவித்ததும் சிவா சிவா என முழக்கம் எழுந்தது.

விசாரித்ததில் அந்த சிவா வேறு யாருமில்லையாம், பெரம்பூர் தொகுதி செயலாளராம். அவர் போட்டியிட விரும்பாமல் அந்த இடத்தை விஜய்க்கு கொடுத்ததைதான் அவர் விட்டுக் கொடுத்தாரு என கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+