விஜய் செய்த பெரும் வரலாற்று தவறு! சுற்றியிருக்கும் 'சூத்திரதாரிகள்' சொன்ன தவறான ஐடியா! எல்லாம் ஓவர்?
சென்னை: தமிழக அரசியலில் நேற்று அரங்கேறிய காட்சிகள், ஒரு அரசியல்வாதி செய்யக்கூடாத மாபெரும் 'பிளண்டர்' மிஸ்டேக் (Blunder Mistake) ஆகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விவகாரம், இப்போது அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளது.

அடப்பாவிகளா.. இது என்ன இன்ஸ்டாகிராம் ரீல்ஸா?
விஜய் தரப்பு ஆளுநரைச் சந்தித்தபோது, 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கணக்கு காட்டியது. இதில் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவு கடிதம் இல்லாத நிலையிலும், மெஜாரிட்டியை எட்டிவிட்டதாகக் கூறப்பட்டது. குறிப்பாக, அமமுக-வின் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் இணைக்கப்பட்டிருந்ததுதான் ஒட்டுமொத்த சிக்கலுக்கும் தொடக்கப்புள்ளி.
ஆனால் அந்த கடிதம் பொய் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நான் கடிதமே கையெழுத்து போடவில்லை என்று காமராஜ் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் தவெக தரப்பு ஒரு வீடியோவை ஆதாரமாக வெளியிட்டுள்ளது. கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் காமராஜிடம் அவசரம் அவசரமாகக் கையெழுத்து வாங்கும் காட்சிகள் அதில் உள்ளன. இதைப் பார்த்துதான் அரசியல் விமர்சகர்கள் கொந்தளிக்கிறார்கள். "அடப்பாவிகளா.. கார்ல உட்கார வெச்சு கையெழுத்து வாங்கிய வீடியோவை எல்லாம் ஆதாரமாக வெளியிடலாமா?" என்பதுதான் அவர்களின் கேள்வி.
ஒரு கட்சியின் எம்.எல்.ஏ தானாக விரும்பி ஆதரவு கடிதம் தருகிறார் என்றால், அவரே அதைத் தட்டச்சு செய்து முறையாக வழங்க மாட்டாரா? அதை விடுத்து, காரில் உட்கார்ந்து கையெழுத்திடுவதை 10 வினாடி வீடியோவாக வெளியிடுவது என்ன இன்ஸ்டாகிராம் ரீல்ஸா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த வீடியோவே தவெக-விற்கு எதிராகத் திரும்பியுள்ளது. காமராஜ் கையெழுத்திட்ட போது அருகில் இருந்தவர், பின்னாலிருந்து வீடியோ எடுத்தவர், அதை வாட்சப்பில் அனுப்பியவர் என அத்தனை பேரும் இப்போது போலீஸ் வளையத்திற்குள் வர வாய்ப்புள்ளது.
ஆளுநர் மாளிகையில் அம்பலமான பொய்!
டிடிவி தினகரன் அளித்த புகாரின் பேரில், ஆளுநர் மாளிகையிலிருந்து காமராஜுக்கு நேரடியாக அழைப்பு சென்றது. அப்போது, "நான் அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை" என காமராஜ் அதிரடி காட்டினார். நேரில் ஆளுநரைச் சந்தித்த அவர், தான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிப்பதாகத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு நிழற்பட நகலை (Photocopy) வைத்துக்கொண்டு விஜய் தரப்பு ஆளுநரை ஏமாற்ற முயன்றதாகத் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சுற்றியிருக்கும் 'முட்டாள்கள்' யார்?
விஜய் முன்னெடுத்த இந்த நகர்வில் பல அடிப்படைத் தவறுகள் உள்ளன.
116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே இருக்கும்போது, எந்த தைரியத்தில் 120 என கணக்கு காட்டி ஆளுநரைச் சந்திக்கச் சென்றார்?
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களை அழைத்துச் செல்வதை விடுத்து, தனது நண்பர்களையும் ஆளுநர் மாளிகைக்குள் ஏன் அழைத்துச் சென்றார்?
செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த சீனியர்கள் கூடவா இது தவறு என்று அவருக்கு அறிவுறுத்தவில்லை? இது ஆட்சியில் நண்பர்களின் தலையீடு இருப்பதைக் காட்டவில்லையா?
டிடிவி தினகரன் 'குதிரை பேரம்' மற்றும் 'கடத்தல்' என மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும், தவெக தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ பதில் வராதது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஒரு வேண்டுகோள்
டியர் விஜய், உங்களைச் சுற்றியிருக்கும் 'சூத்திரதாரிகளை' முதலில் விரட்டியடியுங்கள். அவர்கள் தரும் தவறான ஐடியாக்கள் உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கே உலை வைப்பதாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு குளறுபடிகளா? என்ற அரசியல் விமர்சகர்களின் கேள்வி பொதுமக்களிடமும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முறையான தெளிவு இல்லாமல் ஆளுநர் மாளிகைக்குச் சென்றது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. "குதிரை பேரம் நடத்துகிறார் விஜய்" என்ற பிம்பம் உருவாவதை அவர் எப்படித் தடுக்கப் போகிறார்? சிக்கலை அதிகப்படுத்தும் நபர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications