விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை மட்டுமே வென்றதால், ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் (இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். விஜய் ஏற்கனவே திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவையின் எண்ணிக்கை 229ஆக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட முடியாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த சூழலில்தான், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுவே அதிமுக உட்கட்சி மோதலை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
ராஜினாமா
மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனுக்களும் அளிக்கப்பட்டன. இந்த சூழலில்தான் முதலில் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இசக்கி சுப்பையா
இதற்கிடையே தற்போது அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர், பின்னர் கைப்பட எழுதி மீண்டும் மனு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசக்கி சுப்பையா அதிமுகவில் முக்கிய முகமாக கருதப்பட்டவர். 2011 மற்றும் 2021 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட தலைவராகவே பார்க்கப்படுகிறார். தற்போது அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த 4 ராஜினாமாக்கள் காரணமாக தற்போது சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 234-இல் இருந்து 229 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக இருப்பதால், பெரும்பான்மைக்கான எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
பெரும்பான்மை
இதன் மூலம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண் 116 ஆக குறைந்துள்ளது. தவெகவுக்கு தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவு மட்டும் போதுமான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இல்லாமல்கூட அரசு நிலைத்து நிற்கும் நிலை உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தனிப்பெரும்பான்மை
மேலும், இன்னும் சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி நடந்தால், இடைத்தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்றி, முழுமையான தனிப்பெரும்பான்மை அரசாக மாற வேண்டும் என்பதே விஜய் தரப்பின் திட்டமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications