திருச்செந்தூர் கோயிலுக்கு டைமுக்கு போன விஜய்! கரூர்ல போகலயே ஏன்? சரமாரி கேள்வி!
சென்னை: தூத்துக்குடி திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜய் நேற்று தரிசனம் செய்திருந்தார். காலையில் சரியான நேரத்திற்கு அவர் கோயிலுக்கு சென்றிருந்தார். அதேபோல கரூரில் சரியான நேரத்திற்கு விஜய், பிரச்சார கூட்டத்திற்கு சென்றிருந்தால் அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்காதே! என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கியிருந்தார். அவரது கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது. விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார்.

தற்போது தேர்தல் முடிந்துள்ளது. மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. இப்படி இருக்கையில்தான் விஜய் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். விஜய் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தொடங்குவதில் ஆரம்பித்து அவரது அனைத்து பயணங்களும் ஜோதிடர்களின் ஆலோசனையின்றி நடந்தது கிடையாது. தேர்தலில் எதிரிகளை வீழ்த்த சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் சொன்னதால் தற்போது, திருச்செந்தூர் கோயில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தவெக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயிலில் விஜய்க்கு திரிசுதந்திரர்கள் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதேபோல தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த கோயிலில் சத்ரு சம்ஹார யாகமும் நடத்தப்பட்டது.
எல்லாம் ஓகேதான். விஜய் தரிசனத்திற்கு சரியான நேரத்தில் சென்றிருக்கிறார். அதேபோல கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் சரியான நேரத்திற்கு விஜய் சென்றிருந்தால் 41 உயிர்கள் பலியாகியிருக்காதே! என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் மதியம் 12 மணிக்கு கரூர் வருவார் என்று தவெக சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்திருந்தார். அவரை பார்க்க வெயிலில் காத்திருந்த மக்கள் ஏற்கனவே ரொம்பவும் சோர்வடைந்திருந்தனர். இப்படி இருக்கையில், விஜய் வந்தபோது ஏற்பட்ட நெரிசல் உயிரிழப்புக்கு வழிவகுத்துவிட்டது.
எனவே விஜய் கோயிலுக்கு நேரத்திற்கு செல்வதை போல, மக்கள் சந்திப்புக்கும் நேரத்திற்கு போக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!












Click it and Unblock the Notifications