Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்க்காக பெரம்பூரில் திறக்கப்பட்ட தவெக தேர்தல் தலைமை அலுவலகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. விஜய் வந்தால் மட்டும் அலப்பறை செய்யும் கட்சியினர், அவர் இல்லாவிட்டால் இப்படித்தான் அலுவலகத்தை மூடியே வைப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி அத்தனை வேட்பாளர்கள் இருக்கிறார்களா என குஷ்பு உள்ளிட்டோர் கேள்வி எழுப்பிருந்த நிலையில் வேட்பாளர்களை விஜய் கடந்த வாரம் அறிமுகம் செய்து வைத்தார்.

TVK Perambur Office

இந்த நிலையில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளுக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதால் அங்கு அடித்தட்டு மக்களின் வாக்குகள் எல்லாம் விஜய்க்கு விழும் என்ற கணக்கில் தவெக அந்த தொகுதியில் களப்பணியாற்றுகிறது.

இதற்காக விஜய் பெரம்பூரில் வீடு எடுக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. அது போல் பெரம்பூரில் தவெக பிரம்மாண்டமாக தேர்தல் அலுவலகத்தை திறந்தது.

விஜய் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவர் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பெரம்பூரில், கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பணிமனை மற்றும் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வடசென்னையின் முக்கியத் தொகுதியான பெரம்பூரில் போட்டியிடுகிறார். இதற்காக அங்குள்ள கொடுங்கையூர் - விவேகானந்தர் சாலை சந்திப்பில் கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இறுதியில் கடும் போராட்டங்களுக்குப் பிறகு 100 பேர் மட்டுமே பங்கேற்கும் சிறிய அளவிலான கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி மறுப்பு, நிர்வாகச் சிக்கல்கள் எனப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போதிலும், விஜய் நேரடியாகக் களமிறங்கி தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தார். இதன் விளைவாக தற்போது பெரம்பூரில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.

பெரம்பூர் தொகுதியைத் தனது அரசியல் பயணத்தின் முக்கிய மையமாக விஜய் தேர்ந்தெடுத்துள்ளதால், வடசென்னை பகுதி தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். "மக்களுக்கான மாற்றத்தை வடசென்னையிலிருந்து தொடங்குவோம்" என அக்கட்சியினர் முழக்கமிட்டு வருகின்றனர்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், ஆளுங்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் வடசென்னையைத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு துணிச்சலான முடிவாகப் பார்க்கப்படுகிறது. பெரம்பூர் பணிமனை திறப்பு விழா மூலம், தனது தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கட்டத்தை அவர் வெற்றிகரமாகத் தொடங்கி வைத்துள்ளார்.

எம்கேபி நகர் ஜவஹர் தெருவில் நடிகர் விஜய்க்காக ஏசி வசதி செய்யப்பட்ட தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எனினும் அது மூடியே கிடக்கிறது. அலுவலகத்தை திறந்துவிட்டு ஏன் மூடி வைத்திருக்கிறீர்கள் என நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.

அதற்கு அவர்கள், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஜய் அந்த தேர்தல் அலுவலகத்தை விஜய் திறந்து வைப்பார் என கருதினோம். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால் என்ன செய்வது என தெரியாமல் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் அலுவலகத்தில் பணிகளை செய்து வருகிறார்கலாம்.

விஜய் நேரடியாக பெரம்பூர் அலுவலகத்தில் அமர்ந்து தேர்தல் பணிகலை கவனிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் விஜய் இந்த தொகுதியில் வென்றாலாவது பெரம்பூருக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+