TVK Vijay: ஒரு துளி ஊழல் கறை கூட பட விடமாட்டேன்.. தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாகப் பேசிய தவெக விஜய்
சென்னை: அரசியலுக்கு வந்ததுக்குப் பின்னரும் சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததுக்குப் பின்னரும் சரி முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்களைப் போல ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு துளி ஊழல் கறை கூட படாது. ஊழல் கறை படவும் விடமாட்டேன் என்று தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் ஆவேசமாகப் பேசினார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதை நான் ஏன் அழுத்தமாக சொல்கிறேன் என்றால், நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா.. அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்?. இந்த முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு அப்படியா தெரிகிறதா. அப்படியெல்லாம் நிச்சயமாக நடக்காது. அதுவும் நம்மகிட்ட எல்லாம் அது நடக்கவே நடக்காது.

அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டால், அழுத்தம் உள்ளது. ஆனால் நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். இப்போது, நம்மை தவெகவை மக்கள் நம்புகின்றனர். அவர்களுடைய வேஷம் களைந்துவிடக் கூடாது என்பதால் கலர் கலரா தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
நமக்காக உண்மையாக உழைப்பதற்கு யாராவது வந்துவிடமாட்டார்களா என்று மக்கள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ள நேரம் இது. இப்போது நம்மை, தவெகவை மக்கள் நம்புகின்றனர். மக்கள் விஜய் நம்முடன் நிற்பான் என்று நம்புகின்றனர். அதனால் இது நமக்கு முக்கியமான காலகட்டம் தான். அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார். இவருடன் யார் வரப்போகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
இதுவெல்லாம் நமக்கு புதுசா என்ன. 30 வருடங்களாக நம்மை குறைத்து மதிப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் மக்கள் நம்மை சரியாக மதிப்பிட்டு, நமக்கே நமக்கென்று ஒரு இடத்தை கொடுத்திருக்கின்றனர். கெரியரின் உச்சத்தை மக்கள் கொடுத்திருக்கின்றனர். மக்களுக்கு நம் பிள்ளை என்ற நம்பிக்கை நம் மீது உள்ளது. அரசியலுக்கு வந்ததுக்குப் பின்னரும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததுக்குப் பின்னரும் சரி முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்களைப் போல ஊழல் செய்யவே மாட்டேன்.
ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன். அதைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒரு துளி ஊழல் கறை கூட படிய விட மாட்டேன். பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது. திமுக தீய சக்தி ஊழல் சக்தியாக இருக்கட்டும் இரு கட்சிகளும் தமிழகத்தை ஆளக் கூடாது. அவர்களை எதிர்க்கும் தைரியம் நம்மிடம் மட்டுமே உள்ளது. தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும் என்ன சூழ்ச்சி செய்தாலும் அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போக மாட்டேன்.
தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் நம் அரசியலை நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அடிமையாக இருப்பதற்கு அரசியல் வரவில்லை. அண்டிப் பிழைப்பதற்கோ, அடிமையாக இருப்பதற்கோ அரசியலுக்கு நான் வரவில்லை. தப்பு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது என்கிற பயத்தை ஏற்படுத்த வேண்டும்.
தயவுசெய்து எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். நடைபெறவுள்ள தேர் ஒரு ஜனநாயகப் போர் இந்த ஜனநாயகப் போரில் முன்னணியில் நிற்கக்கூடிய தளபதிகள் நீங்கள் தான். முழித்துக் கொண்டிருக்கும் போதே முழியைத் தோண்டி எடுக்கக்கூடியது இந்த தீய சக்தி. இந்த 3 மாதத்தில் நீங்கள் செய்யப்போகிற வேலையில் தான் நம் வெற்றி உள்ளது. என்னுடன் நிற்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். கட்சி எல்லாவற்றையும் தாண்டி மக்கள் என்னுடன் நிற்க முடிவு செய்துவிட்டனர் என்றார்.
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications