Vijay : வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்.. தேர்தலின் போது என்ன நடக்கும் பாருங்க.. வித்தியாசமாக உருட்டிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியில் வருவதில்லை என்றும், பனையூரில் இருந்தே அரசியல் செய்வதாகவும் பலரும் விமர்சனம் வைத்து வரும் நிலையில் இதற்கு பதில் அளிக்கிறேன் என வித்தியாசமாக உருட்டியுள்ளார் விஜய். விஜய் இன்று பேசியதன் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதாக நினைத்து தன்னை தானே டிரோல் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தவெக தலைவர் விஜய் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களில் ஒன்று அவர் அதிகம் வெளியே தலைகாட்டுவது இல்லை என்பதுதான். அதாவது பல பிரச்சினைகளுக்கு விஜய்யிடம் இருந்து கருத்து வருவதே இல்லை. அதேபோல, கட்சியின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றால் அடுத்த சந்திப்பு வரை வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை.

Vijay

3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தவெக

பனையூரில் இருந்தபடியே அரசியல் செய்கிறார் என்பதுதான் விஜய் மீது அரசியல் கட்சிகள் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. சமீபத்தில் அதிமுக ஐடி விங் கூட பனையூர் பண்ணையார் என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வந்தது. திருப்பரங்குன்றம் விவகாரம் உள்பட பல விஷயங்களில் விஜய் கருத்து தெரிவிக்காமலே இருந்து வருகிறார்.

நேற்றைய பட்ஜெட் குறித்துகூட விஜய்யிடம் இருந்தோ தவெகவிடம் இருந்தோ எந்த ஒரு கருத்தும் இல்லை. இப்படியான சூழலில்தான் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விஜய், சமீபத்திய பிரச்சினைகளில் தனது நிலைப்பாடு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தன்னைத் தானே டிரோல் செய்துகொண்டதாக

ஆனால், வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை என்ற தன் மீதான விமர்சனங்கள் பற்றி பேசிய விஜய், வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விஜய் வாக்களிப்பார். அன்று தெரியும்.. ஏன் டா.. விஜய்யை அழைத்தோம் என நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று மழுப்பலாக பேசியிருக்கிறார்.

களத்திற்கே வருவது இல்லை என்ற தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, நான் வீட்டில் இருந்து வெளியே வருவது இல்லை என்பதை விஜய்யே ஒப்புக்கொண்டு தன்னைத்தானே டிரோல் செய்துவது போல அவரது பேச்சு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

விஜய் என்ன பேசினார்?

பனையூரில் நடந்த விழாவில் விஜய் பேசியதாவது:- "ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. வீட்டை விட்டு வெளியே வா.. என ஒவ்வொருவரும் இப்படியெல்லாம் கேட்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒவ்வொரு வீட்டுல இருக்கிற விஜய்யையும் இவர்கள் கூப்பிடுவது போல இருக்கிறது. பொறுங்க பாஸ்.. வருவாங்க.. முறையா வருவாங்க..

தேர்தல் அன்னைக்கு ஒவ்வொருத்தரும் வெளியே வருவாங்க வோட்டர் ஐடியை கையில் வைத்துக்கொண்டு.. ஒவ்வொரு வீட்டுல இருக்க ஒவ்வொரு விஜய்யும் காலையிலேயே பூத்தில் வந்து நிற்பாங்க பாருங்க.. அன்னைக்கு தெரியும்.. ஏன்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம் என்று.." என்று பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+