விஜய் மட்டுமே வெற்றிக்கு அருகில் வருவார்.. கட்டமைப்பு இல்லாத கட்சி தவெக.. ப.சிதம்பரம் சொன்ன டேட்டா!
சென்னை: தவெக தலைவர் விஜய் 20 சதவிகித வாக்குகளை வாங்கினாலும் கூட வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். விஜய்யை தவிர்த்து வேறு வலிமையான வேட்பாளரையே பார்க்க முடியவில்லை என்று கூறிய ப.சிதம்பரம், வாக்குச்சாவடிகளில் வாக்குகளை பெறுவதற்கான கட்டமைப்பே தவெகவிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் சூழல் இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் தவெக உடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோரால் திமுக உடனான பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இதன் பின் சுமூக உறவு ஏற்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமை என்னை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச அறிவுறுத்தியது. என்னால் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது.
பல்வேறு தேர்தல்களை தொடர்ந்து வென்றுள்ளது. வேறு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அமைக்க எதிர்பார்த்தது உண்மை தான். காங்கிரஸ் கட்சிக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் கடந்த 15 நாட்களாக அந்த எதிர்பார்ப்புகள் பற்றி யாருமே பேசவில்லையே.. தற்போது கூட்டணி அமைந்துவிட்டதால், களத்திலும் சுமூக உறவு இருக்கும். கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.
75 சதவிகித ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளோம். அதேபோல் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வலிமையாக வேரூன்றவில்லை. தற்போது சூழலில் காங்கிரஸ் தனித்து களம் காணும் சூழல் இல்லை. அதேபோல் தவெகவை பொறுத்தவரை அந்த கட்சிக்கு கணிசமான வாக்குகள் இருப்பதாகவே கருதுகிறேன். நகர்ப்புறங்களில், இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது.
ஆனால் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவால் வாக்கு வாங்குவதற்கு கட்டமைப்பு இல்லை. இரு துருவ போட்டி இருந்தால், குறைந்தது ஒரு வேட்பாளர் அந்த தொகுதியில் 43 சதவிகித வாக்குகளை வாங்க வேண்டும். மும்முனைப் போட்டி இருந்தால், ஒரு வேட்பாளர் வெல்ல 38 சதவிகித வாக்குகளை கைப்பற்ற வேண்டும். ஆனால் தவெகவால் சில தொகுதிகளில் 20 சதவிகித வாக்குகளை கூட பெற முடியாது.
அப்படி 20 சதவிகித வாக்குகளை பெற்றாலும் வெல்ல முடியாது. விஜய் நேரடியாக ஏதாவது ஒரு தொகுதியில் களமிறங்கினால், அவர் வெற்றி பெறும் வேட்பாளருக்கு போட்டி அளிக்கக் கூடும். மற்றபடி தவெகவில் வேறு வேட்பாளரையே பார்க்க முடியவில்லை. பாஜகவை பற்றி விஜய் பேசுவதே கிடையாது. பாஜக வெறுப்பு வாக்குகள் திமுக பக்கமே அதிகமாக வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?












Click it and Unblock the Notifications