விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் வேளையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் களம் காணும் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.. இதுதான் தற்போது சோஷியல் மீடியாவிலும் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
விளையாட்டு மற்றும் வணிகத் துறையில் ஆளுமை செலுத்தி வந்த ஆதவ் அர்ஜுனா, இப்போது அரசியல் களத்திலும் தனது பிரம்மாண்ட பின்னணியுடன் காலடி எடுத்து வைத்துள்ளார்..

இப்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.. தனக்கும் தன்னுடைய மனைவி டெய்சிக்கும் உள்ள மலைக்க வைக்கும் சொத்து மதிப்புகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.. இவர்களது மொத்த சொத்து மதிப்பு 442 கோடி ரூபாயைத் தாண்டி நிற்பது பேசுபொருளாகி உள்ளது..
ஆதவ் அர்ஜுனா பிரமாணப் பத்திரம்
ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு மட்டும் 197 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.. அவரது மனைவி டெய்சியின் சொத்து மதிப்பு 245 கோடி ரூபாயாக உள்ளது..
வணிகம் மற்றும் பல்வேறு முதலீடுகள் மூலம் இந்த வருமானம் வருவதாக தெரிவித்துள்ள இவர், கடந்த 5 வருஷங்களில் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கு விவரங்களையும் அதில் பட்டியலிட்டுள்ளார்.. குறிப்பாக 2023-24 நிதியாண்டில் மட்டும் ஆதவ் அர்ஜுனா 29.73 கோடி ரூபாயும், அவரது மனைவி டெய்சி 21.24 கோடி ரூபாயும் வரி செலுத்தியுள்ளனர்.. ரொக்கமாக மட்டும் ஆதவ் அர்ஜுனா கையில் 1.69 கோடி ரூபாயும், டெய்சி கையில் 12.22 கோடி ரூபாயும் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்..
சேமிப்பு வைப்புத் தொகை
வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புத் தொகைகளும் கோடிகளைத் தாண்டி உள்ளன.. ஆதவ் அர்ஜுனா பெயரில் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 17.53 கோடி ரூபாயும், டெய்சி பெயரில் 12.49 கோடி ரூபாயும் இருப்பில் உள்ளது.. இதில் எச்டிஎப்சி வங்கியில் மட்டும் 10 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது..
பங்கு சந்தை முதலீடுகளிலும் இவர்கள் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.. டெய்சி மட்டும் சுமார் 41 நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளார்.. இதில் பார்தி ஏர்டெல், எச்.டி.எப்.சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் அடக்கம்..
லாட்டரி விநியோகம்
மேலும் லாட்டரி விநியோகத்தில் முன்னணியில் உள்ள பியூச்சர் கேமிங் நிறுவனத்தில் டெய்சி 4.52 சதவீத பங்குகளை வைத்துள்ளதோடு, அந்த நிறுவனம் 5 மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்..
அசையா சொத்துக்களை பொறுத்தவரை, ஆதவ் அர்ஜுனா பெயரில் உத்தண்டி மற்றும் போட் கிளப் பகுதிகளில் 17.49 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புகள் உள்ளன.. டெய்சியின் பெயரில் மாமல்லபுரம், கேரளா மற்றும் கோவை போன்ற இடங்களில் 37.45 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் நிலங்களும், 33.28 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகக் கட்டிடங்களும் உள்ளன.
தங்க நகைகள் கணக்கு
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிகக் கட்டிடத்தின் இப்போதைய மார்க்கெட் மதிப்பு மட்டும் 23.51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.. நகைகளை பொறுத்தவரை ஆதவ் அர்ஜுனாவிடம் 1691 கிராம் தங்கமும், டெய்சியிடம் 2225.62 கிராம் தங்கமும் உள்ளன.. இது தவிர 6.16 கோடி ரூபாய் மதிப்பிலான வைர ஆபரணங்களையும் அவர்கள் கைவசம் வைத்துள்ளனர்..
ஆதவ் அர்ஜுனா மற்றும் டெய்சி தம்பதியினர் பிறருக்கு வழங்கிய கடன்கள் மற்றும் கடன்பட்ட விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.. ஆதவ் அர்ஜுனா தனது தங்கை சீதாலட்சுமிக்கு 46.10 கோடி ரூபாயும், நடிகர் விஜய் சேதுபதிக்கு 25 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்துள்ளார்.
டெய்சி வாங்கிய கடன்
அவர் பிறருக்கு கொடுத்துள்ள மொத்த கடன் தொகையின் மதிப்பு 156 கோடி ரூபாயாகும்.. அதே சமயம் டெய்சி தனது தந்தை மார்ட்டினிடம் 13.20 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 26.27 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.. வாகனங்களைப் பொறுத்தவரை இவர்களிடம் இன்னோவா மற்றும் மாருதி கார்கள் உள்ளன..
இறுதியாக தனது குற்றவியல் பின்னணி குறித்த தகவல்களையும் ஆதவ் அர்ஜுனா பகிர்ந்துள்ளார்.. சிபிஐ வழக்கு மற்றும் கரூர் நகர போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் பதியப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசு பணியாளரைத் தடுத்தல் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் உள்ளன.. இவ்வளவு பிரம்மாண்டமான பொருளாதார மற்றும் வணிக பின்னணியுடன் வில்லிவாக்கம் தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற ஆதவ் அர்ஜுனா தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.. அதனால் இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications