விஜய் ஒன்றை புரிஞ்சிக்கணும்! தவெக மாநாடு முடிந்து எத்தனை முறை வெளியே வந்தார்? அண்ணாமலை சரமாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், அதன் பிறகு எத்தனை முறை வெளியே வந்தார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். லண்டனில் இருந்து வந்ததுமே உதயநிதி தொடங்கி விஜய் வரை ஒருத்தரையும் விடாமல் தாக்கி பேசினார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து புறப்பட்டார்.

annamalai vijay chennai

இந்த நிலையில் 3 மாதங்கள் அங்கிருந்து படித்து முடித்துவிட்டு லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை பாஜகவினர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜய் தனது கட்சி மாநாட்டில் நிறைய விஷயங்களை பேசியிருக்கிறார். பாஜகவை பற்றியும் பேசியிருக்கிறார். பதில் சொல்ல வேண்டிய நேரத்தில் அவருக்கு நாங்கள் பதில் சொல்வோம். எப்போதுமே புதிய ஆட்களை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்.

பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜய் உள்ளார். நாட்டிலேயே பெரிய வசூலை பெற்று தரும் கலைஞராகவும் இருக்கிறார். 25 ஆண்டுகளாக படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு. அக்டோபர் 27ஆம் தேதிக்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? அரசியல் என்பது 365 நாட்களும் வேலை செய்ய வேண்டிய இடம் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

விஜய் மிகவும் புகழ்பெற்ற நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது. இந்திய அளவில் பாஜக வலிமையாக எல்லா மாநிலத்திலும் முதன்மைக் கட்சியாக இருக்கிறது என்பதை மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.

சீமான், விஜய், பாஜக , திராவிடக் கட்சிகள் என 2026 தமிழக தேர்தல் களம் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் செந்தில் பாலாஜி தொடங்கி சீமான் வரை அட்டாக் செய்தார் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதை போல்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்களோடு மக்களாக பழகினால்தான் அவர்களுக்கான அரசியலை செய்ய முடியும். இது போல் மக்களை சந்திக்க ரஜினிகாந்த் விரும்பினால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதால்தான் அவர் அரசியலுக்கு வரவில்லை.

அப்படியிருக்கும் போது விஜய்யும் அனைவராலும் அணுகப்பட வேண்டியவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் அவரது கட்சி நிர்வாகிகளுடனாவது அவர் நெருக்கம் காட்ட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

அண்ணாமலை தமிழகம் வந்துவிட்ட நிலையில் இனி தினம் சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் பாஜகவுக்கும் திமுகவுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படும் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+