ஸ்டாலின் மீது பாயும் விஜய்.. பீகார் தேர்தலின்போது ரூ.10,000 கொடுத்ததற்கு வாயே திறக்கலையே?!
சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பெண்களுக்கு இன்று தலா ரூ.5,000 வழங்கி உள்ளதை விமர்சித்துள்ளார் தவெக தலைவர் விஜய். பீகார் தேர்தலின் போது, என்.டி.ஏ கூட்டணி அரசு பெண்களுக்கு ரூபாய் 10,000 வழங்கியது பற்றி வாய் திறக்காத விஜய் இப்போது திமுகவை விமர்சித்துள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
“தவெக ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம்.” என விஜய் கூறியுள்ளார்.

விஜய் பேச்சு
இன்று சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், “ஆயிரம், 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் ஐயாயிரம் என வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க.. சத்தியம் எல்லாம் வாங்குவாங்க.. அப்படித்தானே இத்தனை வருஷமா உங்களை ஏமாத்திருக்காங்க..
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். அது எக்காமே உங்கள் பணம்தான். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்” எனப் பேசியுள்ளார் விஜய்.
பீகார் தேர்தலில்
பீகார் மாநிலத்துக்கு கடந்த நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. 243 தொகுதிகள் உள்ள பீகாரில் 202 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு குறிப்பாக சொல்லக்கூடிய முக்கியமான விஷயம், பெண் வாக்காளர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததுதான் என்று கூறப்படுகிறது.
2025 தேர்தலில் தான் பீகார் வரலாற்றிலேயே 71.6 சதவீத பெண்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதற்கு காரணம், பீகார் மாநிலத்தில் பெண் வாக்காளர்களை தன்வசம் இழுக்கும் வகையில் நிதிஷ் குமார் அரசு தேர்தலுக்கு முன்பாக ஒரு திட்டத்தைச் செய்தது. நிதிஷ் குமார், ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் ரூ.10,000 செலுத்தியது.
பெண்களுக்கு ரூபாய் 10,000
ஒரு குடும்பத்தில் சுய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் முதல் தவணையாக ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தேர்தல் நேரத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் பெண்களின் வாக்குகளை அள்ளியது என்.டி.ஏ கூட்டணி.
அப்போது, பீகார் தேர்தல் சமயத்துல் பெண்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் இதனை ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக விமர்சித்தன. ஆனால், தவெக தரப்பில் இருந்து கனத்த மௌனமே நிலவியது.
விஜய் மீது திமுக விமர்சனம்
இந்தச் சூழலில் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பெண்களுக்கு இன்று தலா ரூ.5,000 வழங்கி உள்ளதை விமர்சித்துள்ளார் தவெக தலைவர் விஜய். பீகார் தேர்தலின் போது, என்.டி.ஏ கூட்டணி அரசு பெண்களுக்கு ரூபாய் 10,000 வழங்கியது பற்றி வாய் திறக்காத விஜய் இப்போது திமுகவை விமர்சித்துள்ளதை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
-
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications