வாட் ப்ரோ..ஓட்டு கூட பனையூரில் தான் போடணுமா? கரூரில் கால் வைக்காத விஜய்! கடும் அதிருப்தியில் நண்பாஸ்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் இதுவரை பாதி தொகுதிகளில் கூட பிரச்சாரம் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெரிசல் சம்பவம் நடந்த கரூர் தொகுதிக்கு இதுவரை விஜய் வரவில்லை. இதனால் கரூர் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் வரவே இல்லை என்பதால் அந்த தொகுதி மக்களும் கொந்தளிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தின் வடுக்கள் மறையாமல் இன்னும் பலரது நினைவில் இருக்கிறது.

அந்த துயர சம்பவத்தில் பலர் உயிரிழந்தது, அரசியலை தாண்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் நேரடியாக விஜய் மீது குற்றம் சாட்டவில்லை என்றாலும், அதற்குப் பிறகாவது அவர் மீண்டும் அந்த பகுதிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்ததாக கூறப்படுகிறது.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் இதுவரை பாதி தொகுதிகளில் கூட பிரச்சாரம் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெரிசல் சம்பவம் நடந்த கரூர் தொகுதிக்கு இதுவரை விஜய் வரவில்லை.
கரூர் சம்பவம்
கரூர் சம்பவம் நடந்ததிலிருந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், அவர் கரூருக்கு நேரில் வராதது தொண்டர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேச்சுக்கு முடிவு கட்டும் வகையில் விஜய் நேரில் கரூருக்கு வந்து மக்களை சந்தித்திருக்கலாம் என்பதே அவர்கள் கருத்தாக உள்ளது.
கரூரில் விஜய்
அது நடந்திருந்தால், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி அளிக்கும் வகையிலும், தனது அரசியல் உறுதியை வெளிப்படுத்தும் வகையிலும் இருந்திருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் எதிர்கொண்ட சவால்களை நினைத்துப் பார்த்தால், கரூரில் விஜய்யின் வருகை மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கும் என்ற கருத்தும் பல இடங்களில் எழுந்துள்ளது.
தொண்டர்கள் அதிருப்தி
இதே நேரத்தில், கட்சி நிர்வாகிகள் தரப்பில் வேறு விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. விஜய்யின் மீது கட்சிக்குள் எந்தவித கோபமோ அதிருப்தியோ இல்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனுமதி தொடர்பான சிக்கல்களே அவர் சில இடங்களுக்கு செல்ல முடியாததற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெரிய கூட்டங்களை நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவில் இல்லாததால், சில திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் வருகை
அதேபோல், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும், பாதுகாப்பு காரணங்களால் திட்டமிடப்பட்ட கூட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் காலத்தில் பல கட்சித் தலைவர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வரும் நிலையில், விஜய்யின் நேரடி வருகை இல்லாதது களத்தில் ஒரு அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தவெக வேட்பாளர்கள் அதிருப்தி
இந்த நிலையை சமாளிக்க, கட்சி வேட்பாளர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, விஜய் நேரில் வராத குறையை சமாளிக்க அவரது உருவச்சிலைகளை பிரச்சார வாகனங்களில் பயன்படுத்துவது, அவரைப் போல உருவ ஒற்றுமை கொண்ட நபர்களை கொண்டு மக்களை சந்திப்பது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சமீப காலமாக தொழில்நுட்ப உதவியுடன் 'ஹோலோகிராம்' முறையில் விஜய்யின் உருவத்தை திரையில் தோன்றச் செய்து, அவர் பேசுவது போன்ற காட்சிகளை காட்டியும் வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. ஆனாலும், அது வாக்குக்கு கைகொடுக்காது என புலம்புகின்றனர் தொண்டர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார்












Click it and Unblock the Notifications