விஜய் கொந்தளித்தது ஓகே.. ஆனா என்னங்க இது? திமுகவை சீண்டுறாரா? பாஜக பற்றி ஒரு வார்த்தை இல்லையே!
சென்னை: சிஏஏ சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்துள்ள விஜய், மத்திய அரசை விமர்சிப்பதை தவிர்த்துள்ளார். அதேசமயம், தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் எனக் குறிப்பிட்டு திமுகவை இடித்துள்ளார். விஜய்யின் அறிக்கை விவாதப் பொருளாகி உள்ளது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை நேற்று (மார்ச் 11) வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசு, சிஏஏ சட்டத்தை அமல் படுத்தி இருப்பதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

விஜய் அறிக்கை: இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என தனது அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பற்றி ஒரு வார்த்தை இல்லையே: விஜய்யின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள அதே சமயத்தில், விஜய் மத்திய பாஜக அரசை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. குடியரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசை ஒப்புக்கு கூட விமர்சிக்காமல் மேலோட்டமாக விஜய் அறிக்கை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரான திமுக தலைவர் ஸ்டாலினை சீண்டும் வகையில் விஜய்யின் அறிக்கை இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
ஸ்டாலின் உறுதி செய்துவிட்டாரே: சிஏஏ அமல் பற்றிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காட்டமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றியதையும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும், சிஏஏ அமல் படுத்தப்படுவது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் பரவிய போதே, "உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சிஏஏவை கால் வைக்கவே விடமாட்டோம்." எனத் தெரிவித்திருந்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் தான் மத்திய அரசை விமர்சிக்காமல், மாநில ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் விஜய் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஜய்க்கு நெட்டிசன்கள் கேள்வி: மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் படாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பின்னர் வேறு யார் உறுதி அளிக்க வேண்டும்? தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் உங்களுக்கு சம்மதமா? என நெட்டிசன்கள் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் திமுக வை பார்த்து CAA சட்டத்தை அமல் படுத்தக் கூடாது என்று சொல்லும் விஜய், இந்த சட்டத்தை செயல்படுத்திய பாஜக வுக்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டதை விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடினாலும், அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் காரணமாக சமூக வலைதளங்களில் சூடான விவாத 'கன்டென்ட்' ஆகியுள்ளார் விஜய்.
-
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications