தங்கம் வைரம்..அள்ளி கொடுத்த விஜய்.."என்னுயிர் இளவல் என் அன்புத்தளபதி விஜய்”..புகழ்ந்து தள்ளிய சீமான்
சென்னை: நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு ம்ற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிகளின்படி தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க மோதிரம், வைர மோதிரம் உள்ளிட்டவற்றை பரிசளித்த நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என் அன்பு தளபதி விஜய் என புகழாரம் சூட்டியுள்ளார்.
எதிர்பார்த்தது போலவே மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா.

கடந்த ஆண்டை போல் அல்லாமல் இந்த முறை இரண்டு கட்டங்களாக விஜய் மாணவர்களை சந்திக்கும் நிலையில் இதற்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.
சென்னையில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் காலை 9:30 மணிக்கு நடிகர் விஜய் அரங்குக்கு வருகை தந்தார் தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உற்சாகமாக கலந்துரையாடிய விஜய் அதற்குப் பிறகு அவர்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் தம்பி, தங்கையர்களுக்கு வாழ்த்து..
பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான்.. நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. துறையை தேர்ந்தெடுப்பது போல அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும் தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான்.. நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்..எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் கடினமாக உழையுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்..
தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவது என்னை கவலை கொள்ளச் செய்துள்ளது. எனவே போதைப் பொருள் பயன்பட்டை ஒழிக்க எனக்கு உறுதி அளிக்க வேண்டும் எனக் கூறியதோடு, அவர்களையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளச் செய்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வைர மோதிரம், நிதியுதவி, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
நடிகர் விஜய்யின் இந்த நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் எழும்பி வருகிறது. இந்த நிலையில், ஏழை, பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்தும் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை;
கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;
'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” என கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications