தமிழக முதல்வர் விஜய்.. நேரடி கண்ட்ரோலில் எடுத்த முக்கிய துறைகள்! முழு லிஸ்ட்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறைகள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் தொடர்பான துறைகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகத் துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். விஜய் அமைச்சரவை பதவியேற்று கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது.

விஜய் வசம் உள்ள துறைகள்
அமைச்சரவையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது, அதிமுக அதிருப்தி அணிக்கு ஒதுக்கலமா? என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் விஜய் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. விஜய் அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒருவழியாக இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்வர் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், IAS, IPS, IFS, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளைத் தன் வசம் வைத்துள்ளார்.
மகளிர், இளைஞர் நலன்
விஜய் தனது தேர்தல் பிரசாரத்தில் மகளிர் நலன் இளைஞர் நலம் உள்ளிட்ட துறைகளை தன்வசமே வைத்து இருப்பேன் எனப் பேசிவந்தார். இதனையே தற்போது முதல்வராக பதவியேற்ற பிறகு செய்துள்ளார். முக்கியமாக கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த உதயநிதியிடம் விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் ஆகிய துறைகள் மட்டுமின்றி சிறப்பு திட்ட செயலாக்கம் ஆகிய துறைகளை வைத்து இருந்தார். இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையையும் விஜய் தனவசமே வைத்துள்ளார். விஜய் வசம் மொத்தம் 17 துறைகள் உள்ளன.
சிறப்பு திட்ட செயலாக்க துறையின் பணிகள்:
துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். அதாவது முதல்வரே பெரும்பாலும் இதை அறிவிப்பார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பப்பட்டது. சிறப்பு திட்டங்களை கண்காணிக்கவும் இந்த துறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்வர்) இணைந்து செயல்படுவார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறையே செயல்படும்.
-
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications