நிலைமை கைமீறுது? தவெக உள்ளே வெடித்த போர்.. மாறி மாறி மோதிக்கொள்ளும் தலைகள்? குழப்பத்தில் விஜய்
சென்னை: கரூர் சம்பவம் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளே நிர்வாகிகள் இடையே கடுமையான மோதல் வெடித்து உள்ளதாம். இதனால் நடிகர் விஜய் கடுமையான குழப்பத்தில் இருக்கிறாராம்.
1. கரூர் 41 பேர் பலியான வழக்கில் தவெக மதியழகன், பவுன்ராஜ் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். நாம் செய்தது எல்லாம் தலைவர் சொல்லித்தான்.. பொதுச்செயலாளர் சொல்லித்தான். ஆனால் நம் மீதுதான் நடவடிக்கை பாய்ந்து உள்ளது என்று பல மாவட்ட நிர்வாகிகள்.. இவர்களை நம்பி இருந்தால் பாதுகாக்க மாட்டார்கள் போலயே என்று குரல் எழுப்ப தொடங்கி உள்ளார்களாம்.

2. திமுக, அதிமுகவில் எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள் அமைச்சர்களை விட பவர் புல் நபர்கள். ஆனால் இங்கே மாவட்ட செயலாளரை கைது செய்துள்ளனர். ஆனால் விஜய் வீடியோவில் ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை. ஒரு போஸ்ட் கூட போடவில்லை. இப்படி கைவிட்டு விட்டார்களே.. இது சரியா என்று குரல் எழுப்ப தொடங்கி உள்ளார்களாம்.
3. இன்னொரு பக்கம் விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் டாப் தலைகளுக்கு இடையிலேயே மோதல் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது இந்த அசம்பாவிதத்திற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரியாமல் இவர்களுக்கு இடையே மாறி மாறி பழி போட்டு.. அதுவே இவர்களுக்கு இடையே கடுமையான மோதலாக மாறிவிட்டது.
4. கட்சிக்கு உள்ளேயே ஆதவ் அர்ஜுனா - அருண் - ஜான் ஆரோக்கியசாமி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறபடுகிறது. என்றால் கரூரில் திடீரென கூட்டம் நடத்த வேண்டும் என்று ஐடியா கொடுத்தது ஒருவர்.. அதற்கு தீவிரமாக பல மாவட்டங்களில் இருந்து கூட்டம் கூட்டியது இன்னொருவர் .. அங்கே மெதுவாகபோகலாம் . தாமதமாக போகலாம் என்று வியூகங்களை வகுத்தது இன்னொருவர்.
தமிழக வெற்றிக் கழக உள்ளே கடும் நெருக்கடி
5. இதில் இந்த விவகாரங்களுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கோபம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ளதாம். அதனால் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளே கிட்டத்தட்ட அரசியல் போர் வெடித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
6. பல கட்சிகள் இது போன்ற சவாலை எதிர்கொள்ளும். ஆனால் அது போன்ற சவால்களுக்கு பின் உட்கட்சி மோதல்கள் சில நாள் கழித்து சரி ஆகும். ஆனால் இங்கே கட்சி தொடங்கிய சில மாதங்களில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து உள்ளது. இதனால் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துவிட்டது.
7. இதை தடுக்க விஜயும் பெரிதாக முயற்சிக்கவில்லை என்கிறார்கள். அதாவது பிரச்சனை வந்துவிட்டது. முதலில் நம் மீது இருக்கும் விமர்சனங்களை சரி செய்வோம் என்றே விஜய் நினைக்கிறாராம். அதனால்தான் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் பெரிதாக விஜய் பேசவில்லை. அவர் தான் போட்ட வீடியோவில் கூட தன்னுடைய மனநிலை பற்றி மட்டுமே பேசினார்.
8. நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் விதமாக.. நிர்வாகிகளை சீர்படுத்தும் விதமாக.. கட்சியை மக்களுக்கு ஆதரவாக களமிறக்கும் விதமாக எதுவும் பேசவில்லை. இதற்கு காரணம் உட்கட்சி மோதல் இந்த விவகாரத்தால் உச்சத்தில் உள்ளதே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை












Click it and Unblock the Notifications