அதிமுக காலியாக போகுது.. விஜய் வருகையால் பார்முலாவே மாற போகுது.. போட்டு உடைத்த எக்ஸ்பர்ட்
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் மிகவும் விசித்திரமானதாக இருக்கும்.. பலர் இந்த தேர்தலில் பிரிந்து கிடக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே.. அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது கமிட் ஆகி இருக்கும் இரண்டு படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது., என்று விஜய் கூறியுள்ளார்.
விஜய் வருகை; இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகையால் 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் கணக்குகள் மாறும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
ஒன்இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்., 2024 லோக்சபா தேர்தலில் ஒரு முக்கியமான விஷயமே இதுதான்.. யாருக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கு என்றே தெரியாது. எடப்பாடி பழனிச்சாமி தனியாக அதிமுகவில் அவரின் தலைமையின் கீழ் எவ்வளவு வாக்கு வங்கி இருக்கும் என்று தெரியாது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுக்கு டெல்டாவில் எவ்வளவு வாக்குகள் உள்ளது என்று தெரியாது.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்றும் தெரியாது. இன்னொரு பக்கம்.. அதிமுக இல்லாமல் அண்ணாமலை தலைமையில் பாஜக எப்படி செயல்படும் என்பதும் தெரியாது . அப்படி இருக்க தேர்தல் முடிவுகளை கணிப்பது மிக மிக கடினமான விஷயம். 2024 லோக்சபா தேர்தல் மிகவும் விசித்திரமானதாக இருக்கும்.. பலர் இந்த தேர்தலில் பிரிந்து கிடக்கிறார்கள். பலரின் வாக்கு வங்கியை உறுதி செய்வது இதுதான்.
2024 தேர்தல் எடப்பாடிக்கு முக்கியம் இல்லை. 2026தான் தேவை. ஆனால் ஒரு தலைவராக தன்னை நிரூபிக்க 2024 அவருக்கு தேவை. இல்லையென்றால் கட்சியில் ஓபிஎஸ் வர வேண்டும் என்று குரல்கள் வைக்கப்படலாம். இப்போது எடப்பாடி தனியாக நின்றால் அவர் காலியாகிவிடுவார். பாஜக அவரை குடித்துவிடும். கட்சி காணாமல் போய்விடும்.
என்ன கூறினார்: எடப்பாடி உடனே சுதாரிக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். பெரிய கூட்டணி அமைத்து 2-4 இடங்களையாவது வெல்ல வேண்டும். இதனால் இதில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது. அதேபோல் விஜய் 2026ல் வருகிறார். அப்போது பல பார்முலாக்களை மாற்றும். விஜய் வந்தால் தேர்தல் சூழ்நிலைகள், வாக்கு வங்கி சிதறல், கூட்டணி கணக்குகள் கூட மொத்தமாக மாறும்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கட்சிகள் மாறி மாறி ஆலோசனைகள் நடத்திவருகிறது. ஒரு சீட்டு வாங்கும் கட்சிகள் பாஜகவுடன்தான் சேரும். பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியையே விரும்பும். ஏனென்றால் அதிமுக அதிக இடங்களை கொடுக்காது. பாஜக கூட்டணியில் இருந்தால் அதிக இடங்கள் கிடைக்கும்.
அதனால் பெரும்பாலும் இந்த கட்சிகள் பாஜகவுடன்தான் செல்லும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. அதனால் அமைச்சர் பதவி கூட கிடைக்கும். இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி அமைக்க பார்க்கிறது. அதிமுகவிற்கு ஆதரவாக யாரும் வரவில்லை. அதிமுகவிற்கான தேர்தல் இது கிடையாது. அவர்கள் அதிக இடம் எடுப்பதால் அவர்களை யாரும் விரும்பவில்லை., என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ












Click it and Unblock the Notifications