Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் பாஜகவிடம் பம்முறாரா? திமுக தான் “டார்கெட்"டாமே.. கரூர் சம்பவத்துக்கு பின் நடந்த மேஜர் மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் பி டீம் என தவெகைவை விமர்சித்து வருகிறது திமுக தரப்பு. அதற்கேற்றார்போல, பாஜகவை கண்டுகொள்ளாமல் திமுகவை நோக்கியே கடுமையாக அட்டாக் செய்து வருகிறார் விஜய். திமுகவை எதிர்ப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் காரணத்தையும் சொன்னார் விஜய். விஜய்யின் பேச்சு தற்போது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் மீண்டும் மீண்டும் ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது. விஜய், தமிழகத்தை ஆளும் திமுகவை மட்டும் கடுமையாக விமர்சிக்கிரார், மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்க்கிறார் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

Vijay Targets DMK Avoids BJP Mention Remarks Trigger Debate

விஜய் கூட்டம்

நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், 5,000 பேர் கலந்து கொண்டனர். இதில் விஜய் திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சிப்பதாக குற்றம்சாட்டிய விமர்சகர்களுக்கு மறைமுகமாக பதிலளித்தார். "தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? அவர் இந்தக் கட்சியை மட்டும் எதிர்க்கிறார் என்று சொல்கிறார்கள்.

இது எந்தத் தேர்தல்? இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். இப்போது இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது யார்? மக்கள் விரோத அரசாங்கத்தை நடத்துவது யார்? அப்படியானால் இங்கு யாரை அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும்?

யாரை எதிர்க்க வேண்டும்? - விஜய்

இந்த மக்கள் விரோத திமுக அரசாங்கத்தை அகற்ற வேண்டுமென்றால், யாரை நாம் எதிர்க்க வேண்டும்? மக்கள் ஏற்கனவே பலமுறை நீக்கியவர்களை ஏன் தேவையில்லாமல் எதிர்க்க வேண்டும்? நமது இலக்கு திமுகவாக இருக்கும்போது நாம் ஏன் இருளில் கற்களை எறிய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கருத்துக்களை அரசியல் பார்வையாளர்கள், தமிழ்நாட்டில் பொதுமக்கள் பலமுறை நிராகரித்து வரும் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளையும் மறைமுகமாகத் தாக்குவதாக விளக்கினர்.

பாஜக

மாநில பாஜக இன்னும் தவெக கூட்டணியை நம்புகிறது. இருப்பினும், விஜய் என்ன சொன்னாலும், இந்தத் தேர்தலில் அறிமுகமாகும் தவெக உடனான கூட்டணியை தமிழக பாஜக தலைவர்கள் கைவிடவில்லை என்று தெரிகிறது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) சேருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார்.

"விஜய் உண்மையிலேயே திமுகவை தோற்கடிக்க விரும்பினால், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும். அரசியல் கூட்டணிகள் வேறு, தேர்தல் கூட்டணிகள் வேறு, சித்தாந்த கூட்டணிகள் வேறு. என் தம்பி விஜய் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழிசை தொடர்ச்சியாகவே கூறி வருகிறார்.

நான் இப்படி சொல்லமாட்டேன் - விஜய்

விஜய் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சாக்குப் போக்குகள் இல்லாமல் மக்களுக்காகப் போராடத் தயாராக இருப்பதாக விஜய் அறிவித்தார். "அதிகாரத்திற்கு வந்த பிறகும், 'அவர்கள் எங்களுக்கு இதைக் கொடுக்கவில்லை, அவர்கள் எங்களுக்கு அதைக் கொடுக்கவில்லை' என்று நான் அமைதியாகச் சொல்ல மாட்டேன். உங்களுக்காக எந்த அளவிற்கும் சென்று போராட நான் தயாராக இருக்கிறேன்" என்று பேசினார்.

"கடந்த செப்டம்பரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 2026 மத்திய பட்ஜெட் குறித்து அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. மத்திய அரசை விமர்சிக்க மறுக்கும் ஒருவர் எப்படி தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக செயல்பட முடியும்?" என்று சி பிஐ(எம்) மாநில செயலாளர் பி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக பக்கம் விஜய்?

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைதியாக அவரை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த மத்திய அரசு விஜய்க்கு ஆதரவாக நின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுக்கு"விசில்" தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியிலும் மத்திய அரசின் கை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. எனினும் இப்போதும் பாஜகவை நேரடியாக விமர்சிப்பதை விஜய் தவிர்த்து வருகிறார். மத்திய அரசு குறித்து விஜய்யின் மௌனத்திற்கு பயம் மற்றும் சந்தர்ப்பவாதம் தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கூறியுள்ளார்.

தொழிலதிபர் போல நடந்துகொள்ளும் விஜய்

"கடந்த ஆண்டு, விஜய் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை விமர்சித்தார், ஆனால் இந்த ஆண்டு அவர் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஜனநாயகன் பட சர்ச்சையில், அவர் ஒரு அரசியல் தலைவராக செயல்படவில்லை. அவர் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி போராடியிருக்க வேண்டும். அதுதான் ஒரு மக்கள் தலைவரின் தனிச்சிறப்பு.

வருமான வரி வழக்குகள் மற்றும் அவரது சினிமா வணிக நலன்களுடன் தொடர்புடைய பயம் இருக்கலாம். அடிமட்டத்திலிருந்து எழும் ஒருவரால் மட்டுமே அரசியலில் தைரியமாகப் போராட முடியும். ஆனால் விஜய் ஒரு தொழிலதிபர் போல சிந்திக்கிறார், பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க திரைக்குப் பின்னால் அமைதியாக லாபி செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

விஜய் பற்றி திமுக, பாஜக

திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் பேட்டி என்ற விஜய்யின் கூற்றை நான் ஏற்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி பல தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. விஜய்யின் கட்சிக்கு 30 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறுவதை எப்படி நம்புவது? தேர்தல்களில் எங்கள் வாக்கு சதவீதத்தை நாங்கள் நிரூபித்துள்ளோம். அவர் தனது உண்மையான சதவீதத்தை நிரூபிக்க முடியுமா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர்கள் விஜய்யை வெளிப்படையாக பாஜகவுன் "பி-டீம்" என்று அழைக்கின்றனர். “விஜய் பாஜகவின் பி-டீமாக செயல்படுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது உண்மைதான். ஆனாலும், தமிழக மக்களுக்கு எது போலி, எது உண்மையானது என்பது தெரியும்" என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+