''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்''.. நோட் பண்ணீங்களா.. விஜயிடம் கம்யூனிச வாசம்?
சென்னை: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள நன்றி அறிக்கையில், ''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்'' என்று அவர் குறிப்பிட்டிருப்பதன் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.
எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதா, கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் பொதுவாக தோழர்கள் என்று அழைப்பார்கள். அதேபோல் விஜயும் தனது கட்சியினரை தோழர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விஜயிடம் லேசாக கம்யூனிச வாசமும் வீசுவது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியினரை உற்சாகப்படுத்த உடன்பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, பாட்டாளி சொந்தங்களே, மக்களே, அன்புச் சகோதர சகோதரிகளே, தம்பிகளே தங்கைகளே, என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் விஜய் தனது கட்சியினரை ''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே'' எனக் குறிப்பிட்டு கவனம் ஈர்த்துள்ளார். அதேபோல் விஜய் தனது நன்றி அறிக்கையில் எடுத்த எடுப்பிலேயே, முதல் வார்த்தையாகவே தமிழ்நாடு என்ற வார்த்தையை கொண்டு வந்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதில் தமிழ்நாடு வெற்றி கழகம் என்று விஜய் பெயர் சூட்டியிருக்கலாமே என கடந்த 2 நாட்களாக பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தான் தாம் அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.
கத்தி திரைப்படத்தில் கம்யூனிசம் என்றால் என்ன என்பது பற்றி சிறுமி ஒருவரிடம் விஜய் விளக்கம் அளிக்கும் காட்சி இங்கே நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கும் போதே தன்னை மதச்சார்பின்மை தலைவராக விஜய் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே பாசத்திற்குரிய தாய்மார்கள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் எனவும் இன்று வெளியிட்ட தனது நன்றி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஜய். கே.எஸ்.அழகிரி, உதயநிதி, உள்ளிட்ட பலரும் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதை வாழ்த்தி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு












Click it and Unblock the Notifications