10, 12ம் வகுப்பு மாணவர்களை கவுரவிக்கும் விஜய்.. மாமல்லபுரம் நிகழ்ச்சியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார். இந்த ஆண்டு கல்வி விருது விழா இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்ட உள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் கடந்த சில வருடங்களாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விருது வழங்கி வருகிறார்.

Vijay Chennai Education

அந்த வகையில், இந்த ஆண்டு கல்வி விருது விழா இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவி, மாணவிகளை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்ட உள்ளார். இந்த வருடம் மொத்தம் 3 நாட்கள் (3 கட்டங்களாக) இந்த கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், "30.5.2025 வெள்ளிக்கிழமை மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது. முதல் கட்ட பரிசளிப்பு விழா 30 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மலும், மாணவருக்கு வைர மோதிரமும் வழங்கப்பட உள்ளது. 2, 3-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட உள்ளது. அதன்படி 600 மாணவ - மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட இருக்கிறது.

முதல் கட்ட பரிசளிப்பு விழாவில், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள்.

நிகழ்ச்சி நடக்கும் அரங்க வளாகத்திற்குள் யாரும் கட்சி கொடிகளை கொண்டு வரக்கூடாது என்று விஜய் உத்தவிட்டுள்ளார். விழா நடைபெறும் மாமல்லபுரம் ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பவுன்சர்கள் அனுமதி அளித்து வருகிறார்கள்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகள் மட்டும் இன்றி கடின உழைப்பு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் விருது அளிக்கப்படுகிறது. அதாவது,அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க உள்ளனர்.

இன்று நடைபெறும் விழாவில் சுமார் 2,000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+