சி.ஜோசப் விஜய் எனும் நான்.. வாகை சூடும் வரலாறு திரும்பியது.. தமிழகத்தின் முதலமைச்சரானார் விஜய்!
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழக அரசியலை உச்சக்கட்ட பரபரப்பில் வைத்திருந்த ஆட்சி அமைப்புக்கான இழுபறிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெறும் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், கடந்த சில நாட்களாக கடுமையான அரசியல் பரபரப்பு நிலவியது.
முதலில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

காங்கிரஸ் ஆதரவு
இதன் மூலம் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது. பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை உறுதிப்படுத்திய நிலையில், தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்தது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆளுநரை தொடர்ந்து சந்தித்து வந்த விஜய், இறுதியாக அனைத்து ஆதரவு கடிதங்களுடனும் நேற்று மக்கள் மாளிகை சென்றார். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியல் மற்றும் கடிதங்களை ஆளுநரிடம் வழங்கினார்.
தமிழக அரசியல்
இதனை ஆய்வு செய்த ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைத்தார். இதையடுத்து இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், விஜய் முதலமைச்சராக பதவிற்றார். அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார். அவருடன்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மூத்த நிர்வாகி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
விஜய் பதவியேற்பு
இந்த பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றமும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சென்னை நோக்கி திரண்டுள்ளனர். அதே நேரத்தில், புதிய அரசு அமைந்தாலும் இன்னும் ஒரு முக்கிய கட்டம் மீதமுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய்
வரும் 13-ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய் அரசுக்கு உள்ளது. பல நாட்களாக நீடித்த அரசியல் பரபரப்பு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், ஆதரவு கடிதங்கள், ஆளுநர் சந்திப்புகள் ஆகியவற்றுக்கு முடிவாக, இன்று தமிழகத்தில் புதிய அரசின் அத்தியாயம் தொடங்குகிறது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளதால், அவரது திரை மற்றும் அரசியல் பயணத்தில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications