பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்.. விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள்
சென்னை: தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். நள்ளிரவில் மதுரை வந்த அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வழக்கமாக வரும் வெள்ளை சட்டை காக்கி பேண்டிற்கு பதிலாக பட்டு, வேஷ்டி சட்டையில் வருகை தந்தார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு கடந்த 4 நாட்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கிளம்பிய விஜய் மதுரை வந்தடைந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் விஜய் திருச்செந்தூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. விஜய் மதுரை வருகை தர இருப்பதாக தகவல் வெளியானதும் இரவே தவெகவினர் மற்றும் அவரது ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிய தொடங்கினர்.
நள்ளிரவில் விமான நிலையம் வந்த விஜய் அங்கு திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். விஜய் வழக்கமாக அணியும் வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டையில் வருகை தந்து இருந்தார். விஜய்யை பார்த்த உற்சாகத்தில் தவெகவினர் விமான நிலையத்தில் ஆர்ப்பரித்தனர்.
விஜய் தனது காரில் பக்கவாட்டில் ஏறி நின்றவாறு தொண்டர்களுக்கு கை அசைத்தார். விஜய்யின் காரின் மீது பூக்களை தூவியும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மதுரை விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய்யின் கார் அங்கிருந்து புறப்பட்டு செல்ல சிறிது தாமதம் ஏற்பட்டது.
போலீசார் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்ததையடுத்து, அங்கிருந்து விஜய் புறப்பட்டு சென்றார். சாலை மார்க்கமாக விஜய் திருச்செந்தூர் செல்வதாக கூறப்படுகிறது. விஜய் வருகையை ஒட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு விமான நிலையத்தில் போடப்பட்டு இருந்தது.
-
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications