Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய், திரிஷா குறித்து நயினார் நாகேந்திரனின் சர்ச்சை.. திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும் என பாஜக நயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சித்த நிலையில் இதற்கு திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை கூட்டினார். 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

Vijay Trisha Row dmk mp thamizhachi thangapandian Slams BJP Nainar Nagendran Remarks

திரிஷா கிட்ட இருந்து வெளியே வாங்க

விஜய்யின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நயினார் நாகேந்திரன் கூறுகையில், "பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது. அனுபவமே இல்லாதவர்.

முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச்சொல்லுங்கள். திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தமிழச்சி தங்க பாண்டியன் கண்டனம்

விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பொதுவெளியில் ஒரு பெண் குறித்து இப்படி அநாகரீகமாக பேசுவதை ஏற்க முடியாது என்றும் விஜய்யை விமர்சிக்க அரசியல் ரீதியாக ஓராயிரம் விஷயங்கள் உள்ளன.

ஆனால் தனிமனித தாக்குதல் ஏற்கும்படியாக இல்லை என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது

இந்த நாட்டை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக விஜய் மீதான மேற்கூறிய விமர்சனத்திற்கு தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்தும் காட்டமான பதிலடியை கொடுத்தார். நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார்.

காட்டமாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்

எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?

4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா? முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள்.

எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+