டீசலில் கலப்படம்! ரிப்பேரான கார்! ரூ 3 லட்சம் செலவு! பெட்ரோல் பங்கில் குமுறிய மாகாபா ஆனந்த்!
சென்னை: சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காருக்கு டீசல் போட்ட போது அதில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததால் தனது கார் ரிப்பேராகி ரூ. 3 லட்சம் செலவு செய்ததாக விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் கூறியிருப்பதாவது: டீசல்ல தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இது ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தரோம்னு பெட்ரோல் பங்க் நிர்வாகம் பேரம் பேசுறாங்க.

உங்கள நம்பிதானே பெட்ரோல், டீசல் போட வரோம். ஆனால் இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு என விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குமுறியுள்ளார்.
இவர் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டாகாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை ஊதியம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் இவர், பல்வேறு எஃப்.எம். ரேடியோக்களில் ஆர்.ஜே.வாகப் பணியாற்றிய ஆனந்த், "சினிமா காரம் காபி" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இதற்கிடையே, "அது இது எது" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்குச் சென்றதால், அந்த நிகழ்ச்சியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சி மாகாபா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் இருந்தே இவருடைய புகழ் அதிகரித்தது. இதையடுத்து, விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, சவுண்ட் பார்ட்டி, ஊ சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளரான மாகாபா ஆனந்தில் இருக்கும் 'மாகாபா' என்பது அவருடைய இனிஷியலாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தனர். ஆனால் அதுதான் இல்லையாம்.
இதுகுறித்து மாகாபா ஆனந்த் கூறுகையில், "முதலில் நான் சூரியன் எஃப்.எம்.-மில் பணியாற்றினேன். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ரேடியோ மிர்ச்சியில் வேலை கிடைத்தது. ஆனால், சென்னைக்குச் செல்லுமாறு கேட்டார்கள்.
அப்போது எனது மனைவி கர்ப்பமாக இருந்ததால், அவரைக் கோயம்புத்தூரில் தனியாக விட்டுவிட்டுச் செல்ல எனக்கு மனமில்லை. அதனால், கோயம்புத்தூரிலேயே வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

எஃப்.எம். மார்க்கெட்டிங் விவரங்களுக்கான ஐ.எம்.ஆர்.பி. (IMRB) கணக்கெடுப்பில் என் பெயர் வந்தது. அப்போது எனது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டார்கள். நானும் என்ன மாற்றலாம் என்று யோசித்தபோது, எனது பாஸ் மிர்ச்சி செந்தில்தான் 'மா.கா.பா.' என்று என் பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழியைக் கொடுத்தார்.
'மாகாபா' என்றால் இந்தியில் 'அம்மாவுடைய அப்பா' என்று அர்த்தமாம். பின்னர் அதுவே எனது பெயராகிவிட்டது. இந்த பெயரை நான் கெசட்டிலும் சேர்க்கவில்லை. மற்றபடி எல்லாரும் அழைப்பது 'மாகாபா'தான்" என்று ஆனந்த் தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications