புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா.. 3 பேருக்கும் புதிய உத்தரவு போட்ட விஜய்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நாள் பனையூர் அலுவலகம் வந்த தவெக தலைவர் விஜய், கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோரிடம் பல்வேறு அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவுக்கும் பல்வேறு டோஸ் விழுந்திருக்கிறது.
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. நாளை மேற்கு வங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும். எக்ஸிட் போல் முடிவுகளில் ஓரளவிற்கு எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த முறை திமுக, அதிமுக மற்றும் தவெக இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

குறிப்பாக அதிமுக பலவீனமாக இருக்கும் இடங்களில் தவெக அபார வளர்ச்சியை பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தவெகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் கணிசமான தொகுதிகளில் தவெக 2ஆம் இடம் பிடிக்கும் என்று பலரும் நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர்.
இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தவெக தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நாளன்று பனையூர் அலுவலகத்திற்கு விஜய் வந்துள்ளார்.
அப்போது புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய மூவருக்கும் விஜய் தரப்பு வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது விஜய், தவெகவின் கட்டமைப்பு இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று நேரடியாகவே கூறி இருக்கிறார். இந்த கட்டமைப்பு போதாது என்று பேசியுள்ள விஜய், கொங்கு மண்டலத்தில் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகளை செங்கோட்டையன் வசம் ஒப்படைத்திருக்கிறார்.
இந்தப் பக்கம் ஆதவ் அர்ஜுனாவிடம், தேர்தல் நேரத்தில் மட்டும் தேர்தல் மேலாண்மை பணிகளை செய்தால் போதாது.. ஒவ்வொரு மாதமும் பயிற்சி பட்டறை, வேட்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவற்றை தொண்டர்களுக்கு அறிவுறுத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக தவெக ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும், அடுத்து களத்தில் நிற்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
விஜய்யும் சொந்த வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய இரண்டிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். இதில் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள பிரச்சனையை விரைவில் முடித்து, அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் தேர்தல் முடிவிற்கு பின் விஜய் இன்னும் ஆக்ரோஷமாக ஆட்சிக்கு எதிரான விஷயங்களை பேசத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்!












Click it and Unblock the Notifications