இதுவே என் கட்டளை.. கட்டளையே சாசனம்! தவெக நிர்வாகிகளிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய விஜய்! ஏமாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் இரண்டு கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பட்டியல் இன்னும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் சிலர் விஜயிடம் கோரிக்கை ஒன்றை வைக்க முடியவே முடியாது என மறுத்திருக்கிறார் விஜய். இதனால் பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார் விஜய். என்ன நடந்தது? என்ன சொன்னார் விஜய்? என்பது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

தமிழக அரசியலுக்கு புதியவர் என்றாலும் பிஸியாகவே இருக்கிறார் நடிகர் விஜய். கட்சியின் பெயர் அறிவித்த பிறகு மாநில மாநாடு வரை அவரது செயல்பாடுகள் சற்று சுணக்கமாகவே இருந்தது. ஆனால் மாநில மாநாட்டிற்கு பின் அவரது கட்சி செயல்பாடுகள் வேகம் எடுத்துள்ளது.

vijay tvk chennai

தொடர்ந்து முதல் முறையாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சந்தித்தது, வேங்கை வயலுக்குச் செல்வதாக அறிவித்தது என அதிரடி காட்டினார். இதற்கிடையே புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது தமிழக வெற்றிக் கழகம். தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர், துணைத் தலைவர் ஆகிய ஐந்து பதவிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பட்டியல் வெளியாகாமல் இருந்தது. இதனால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் மட்டும் இருக்கும் நிலையில் நிர்வாகிகள் அறிவிக்கப்படாததால் தொண்டர்களும் சோர்வாக காணப்பட்டனர். ஏற்கனவே ரசிகர் மன்றத்தில் இருந்து பணியாற்றியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என விஜய் தரப்பு திட்டவட்டமாக கூறியது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் பட்டியலும் அப்படித்தான் இருக்கிறது. இதுவரை இரண்டு கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்து பட்டியலும் வெளியாக இருக்கிறது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் அவர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பொருளாளர், துணை செயலாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் என மாவட்ட ரீதியாக 15 பேருக்கு பதவி வழங்கப்பட இருக்கிறது. இன்னும் மகளிர் அணி, மாணவர் அணி, வர்த்தக அணி, பொறுப்புகளும் வழங்கப்பட இருக்கிறது. மாநில நிர்வாகிகளை பொறுத்த வரை புஸ்ஸி ஆனந்த், வெங்கடேசன் உள்ளிட்டோர் தெரிந்த முகங்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் சிலர் விஜயிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருக்கின்றனர். அதாவது, அதிமுகவில் இருப்பது போல மாவட்ட செயலாளராக இருந்தாலும், மண்டல செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட மாநில பொறுப்புகள் ஆகியவற்றை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒருவருக்கு இரு பதவி கிடையாது, ஒருவருக்கு ஒரு பதவி என்பதின் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் மூலம் சில நிர்வாகிகள் நீண்ட காலமாக மாநில பொறுப்பில் இருந்து விட்டு மாவட்ட செயலாளர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனவே தங்கள் பகுதியில் அரசியல் செய்ய மாவட்ட செயலாளர் பதவியையும், மாநில அரசியலில் ஈடுபட மண்டல அல்லது மாநில அளவிலான பதிவுகளை வழங்க வேண்டும் என கூறினார்கள்.

ஆனால் தனது முடிவில் உறுதியாக இருக்கும் விஜய், ஒருவருக்கு ஒரு பதவி தான். அதே நேரத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால் பதவிகளை பகிர்ந்து அளிக்க வேண்டும். மாநில பதவி வேண்டுபவர்கள் மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தால் மாநில பதவி வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் சில நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் எடுத்த முடிவில் விஜய்யும் உறுதியாக இருப்பதால் வேறு வழியின்றி மாவட்ட அரசியலையே பார்த்துக் கொள்ளலாம் என சமாதானம் ஆகிவிட்டார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+