சீமானின் 'திரள்நிதியை' வெளுத்த விஜய் தவெக! லாட்டரி, சினிமா டிக்கெட் விற்பனையை பேசும் நாம் தமிழர்!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி இடையேயான 'சமூக வலைதள' மோதல்கள் அதி உச்சத்தை எட்டியுள்ளன. சீமானின் திரள் நிதி குறித்து விமர்சிக்கும் விஜய்யின் தவெக நிர்வாகிகளுக்கு லாட்டரி டிக்கெட் விற்பனை, ப்ளாக்கில் சினிமா டிக்கெட் விற்பனை ஆகியவற்றை பதிலடியாக தருகின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களிடம் செல்! மக்களுடன் வாழு! மக்களிடம் கற்றுக்கொள்! மக்களுக்கு சேவையாற்று என்றார் அறிஞர் அண்ணா.

அரசியலில் ஆடம்பரமும், பட்டோபமும்கூடாது என்றும் அறிவுறுத்தினார் அந்தப் பெருந்தகை. ஆனால், அண்ணாவின் வழித்தோன்றல்களே இன்றைக்கு அரசியலை ஆடம்பரமானதாக்கி, கட்சிகளை நிறுவனமயமாக்கிவிட்டார்கள். அந்த அடிப்படையிலேயே, தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை. அதனையே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் வலியுறுத்தினார். அந்த நடவடிக்கைகளை, 'பணக்கொழுப்பு' என மொத்தமாகத்தான் வர்ணித்தார். அந்த விமர்சனம் பல நூறு கோடிகளைக் கொட்டி, தேர்தல் நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப இயங்கும் எல்லாக் கட்சிகளையும்தான் குறிக்கும். அப்படி பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு தவெக எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது?
திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல; வாய்க்கொழுப்பும்கூட! பன்னாட்டு நிறுவனங்களிடமும், தனிப்பெரு முதலாளிகளிடமும்தான் கையேந்தக்கூடாதே ஒழிய, மக்களைப் பொருளாதரத்திற்காகச் சார்ந்திருப்பது ஒரு தவறும் இல்லை. தாங்கள் நம்புகிற அரசியல் வெல்ல வேண்டுமென எண்ணுகிற பொதுமக்கள், தாங்களே விரும்பி அளிக்கிற நன்கொடைதான் திரள்நிதி! தங்களால் களப்பங்களிப்பு செய்ய இயலாதபோது நிதிப்பங்களிப்பு தரும் சனநாயகப் பங்கேற்புதான் திரள்நிதி! திராவிட இயக்கங்கள் தொடங்கி, கம்யூனிச இயக்கங்கள்வரை இந்த முறையிலேயே அமைப்பைக் கட்டியிருக்கிறார்கள் என்பது அரசியல் அறிவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம்.

மக்கள் மன்றத்திலேயே பேசத் துணிவற்ற சகோதரர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குப் போய் என்னப் பேசப் போகிறார்? முதலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசட்டும். அதற்குத் துணிவு இருக்கிறதா? உளறிக் கொட்டுவதைப் பற்றி யார் பேசுவது? "சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடினார் அம்பேத்கர்" என மாநாட்டு மேடையில் உளறிக் கொட்டிய சகோதரர் விஜய்யின் தொண்டர்களா? எழுதிக் கொடுத்ததைக்கூட பிழையின்றி பேசாதவர், சட்டமன்றத்திற்குப் போய் பேசி, அரசியல் மாற்றத்தை சாத்தியப்படுத்தப் போகிறாரா? வெட்கக்கேடு!
தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. நாம் தமிழர் கட்சி வெற்றியை இன்னும் சுவைக்காது இருக்கலாம். ஆனால், உறுதியாக வரும் தேர்தலில் வெல்வோம்! அதேசமயம், எந்த சமரசமும் செய்ய மாட்டோம். ஊழலை ஒழிப்போமெனக் கூறிவிட்டு அதிமுகவோடு உள்ளிட்ட எந்தக் கட்சியோடும் பேச்சு வார்த்தை நடத்தவும் மாட்டோம். குடும்ப அரசியலை ஒழிப்போமெனவும் கூறிவிட்டு, காங்கிரசின் மீது ஒருதலைக் காதல் கொள்ளவும் மாட்டோம்.
நிறைவாக, தவெகவுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல! இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.
-
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்!












Click it and Unblock the Notifications