மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் தவெகவை தேர்வு செய்துள்ளனர் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், எத்தனை கஷ்டம் வந்தாலும் திமுக என்றும் மக்களோடு நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 106 இடங்களிலும், திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 54 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இதன் மூலமாக தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 12 சீட்கள் மட்டுமே தேவை என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்திருக்கிறார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், நாசர், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலரும் தோல்வி அடைந்துள்ளனர். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக வெற்றியை பெற்றுள்ளது. சென்னையில் சேப்பாக்கம் தொகுதி மற்றும் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். மக்களால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள். மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள் தவெகவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
திமுகவினர் வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறோம். எந்தக் கஷ்டம் வந்தாலும் மக்களுடன் நிற்போம். என்னை 2வது முறையாக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேட்டி அக்கட்சி தொண்டர்களிடையே வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications