Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாக்கில் டிக்கெட் விற்பதை நிறுத்திட்டு.. அரசியல் கலாச்சாரத்தை பற்றி பேசுங்க விஜய்! - கோகுல இந்திரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் 3வது ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் பேசிய விஜய், "டப்பா எஞ்சின், ஓட்டை எஞ்சின் என எவ்வளவு என்ஜின் வந்தாலும்.. டாப் எஞ்சின் தமிழக வெற்றிக் கழகம்தான்" என்று அதிமுகவையும், அதன் கூட்டணியையும் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து இருந்தார். விஜயின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து பதிலடிகள் வலுத்துள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இது குறித்து பேசுகையில், "நாங்கள்தான் டாப் எஞ்சின் என்று விஜய் கூறுகிறார். இரண்டு எஞ்சின் ஓடாது என்றும் சொல்கிறார். இப்படி பேசும் விஜய், டாப் எஞ்சின் போட்டு ஒழுங்காக திருச்சியில் இருந்து கிளம்பி கரூருக்கு வந்திருந்தால், அந்த 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள். என்ஜினை மெதுவாக ஓடவிட்டு, வரும் வழி எல்லாம் படப்பிடிப்பு நடத்திக் கொண்டு வந்ததால், 41 பேரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இதையெல்லாம் சிந்திக்காமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

Vijay TVK AIADMK

ஆள் பிடிக்கும் வேலை

சம்பவம் நடந்த உடனேயே அங்கிருந்து விமானத்தில் பறந்து சென்று, வீட்டை பூட்டிக் கொண்டு அமர்ந்திருந்த விஜய், பெரிய மனிதர் கிடையாது. டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின் என.. இந்த மாதிரியான விமர்சனங்களை வைத்து, தன்னைத்தானே மிகைப்படுத்திக் கொண்டு, எந்த கட்சியில் யார் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களா.. அவர்களை எல்லாம் ஆள் வைத்து பிடிக்கும் வேலையை விஜய் செய்து கொண்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சி

விஜயுடன் இருக்கும் 90% பேர், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள். ஆள் பிடிக்கிற வேலையை பார்த்து, முதலில் அவர் தனது கட்சியை பலப்படுத்திக் கொள்ளட்டும். நாங்கள் உறுதியானவர்கள், எங்கள் தலைவர்களுக்கு விசுவாசமானவர்கள். எனவே, எங்கள் மீது புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார். விஜய் வைக்கும் விமர்சனத்திற்கு நாங்கள் சொல்வது இதுதான், அதிமுக தலைமையில் ஒரு ஆட்சி அமைக்கப் போகிறோம்.

பத்திரிகையாளர்களை சந்திக்காதவர்

இதுதான் எங்கள் கொள்கை, இதுதான் எங்கள் கோட்பாடு, எங்களுடைய நிலைப்பாடு இதுதான், திட்டம் இதுதான், என்று பேசாதவர் விஜய். ஆனால், நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார். பத்திரிக்கை துறையை பார்க்காதவர், பத்திரிக்கை நண்பர்களை சந்திக்காதவர், தன்னுடைய நிலைப்பாடுகளை மிகத் தெளிவாக சொல்வதற்கு கூட அஞ்ச கூடியவர்தான் விஜய்.

முதலில் இதை செய்யட்டும்

இவர் ஊழலை பற்றி பேசவே கூடாது. இவர் முதலில் பிளாக்கில் தன் படத்திற்கு டிக்கெட் வாங்காதீர்கள் என்று சொல்லட்டும். அதிகமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்காதீர்கள், என்னுடைய கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள், ஒரு தியேட்டரில் எவ்வளவு பேர் அந்த ஷோவை பார்க்க முடியுமோ.. அவ்வளவு பேர் மட்டும் பார்த்தால் போதும், ப்ளாக்கில் எதுவும் செய்யாதீர்கள் என சொல்லட்டும். முதலில் அந்த கலாச்சாரத்தில் இருந்து வெளியில் வரட்டும். பிறகு மற்றவை பேசிக்கொள்ளலாம்" என்று கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+