நீதிமன்ற படியேறியே பாதி வயசு போயிரும் போல! இப்படி வந்து சிக்கியிருக்காரே விஜய்! சங்கீதா லேட்டஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே விஜய் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த 2 மாதங்களில் சிபிஐ வழக்கு, ஜனநாயகன் திரைப்பட விவகாரம் என, நீதிமன்றத்தால் சிக்கலை எதிர்க்கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பது, விஜய்க்கு நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

கரூர் நெரில் பலி தொடர்பான வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விஜய் குறித்து நீதிமன்றம் சொல்லியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Vijay Under Legal Siege

சாட்டை எடுத்த நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முன்னர், தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியல் லாபத்திற்காக மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் கடுமையாக சாடியிருந்தது. மட்டுமல்லாது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டால் அத்துடன் எல்லா கடமைகளும் முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது என்று சொன்ன நீதிமன்றம், குறிப்பிட்ட அளவு மக்களை மட்டுமே தாங்கும் இடத்தில், அதிக அளவில் மக்களை திரட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் இந்த துயரத்திற்கு கட்சியின் தலைவர், அதாவது விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னது. இத்துடன் நீதிமன்றம் நிற்கவில்லை. வெறும் கைத்தட்டல்களுக்காக மக்களை அழைத்து வந்து ஆபத்தில் தள்ளுவது வேதனைக்குரியது என்றும் சாடியிருந்தது.

ஜனநாயகன் வழக்கு

இதனை தொடர்ந்து அவர் சிக்கிய மற்றொரு வழக்கு, ஜனநாயகன் திரைப்படம்தான். திரைப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் விஜய் தரப்பு நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆரம்பத்தில் என்னவோ விஜய்க்கு ஆதரவாகத்தான் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தது. ஆனால், இதனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. பின்னர் நடந்த விசாரணையில் தணிக்கை வாரியத்தின் சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது.

ஐடி அபராதம்

இதனையடுத்து, சம்பளத்தை கணக்கு காட்டாததால் வருமான வரித்துறை விதித்த அபராதத்தை ரத்து செய்ய கோரி, விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அந்த வழக்கிலும் விஜய்க்கு பின்னடைவுதான் ஏற்பட்டது. விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் என்று நீதிமன்றம் சொல்ல.. விஜய் தரப்பு கடும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், தற்போது விவாகரத்து கோரி விஜய்யின் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்குக்காக விஜய் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+