“அதிமுகவை சேர்த்துக்கலாம்”.. விஜய்க்கு அட்வைஸ் தந்த சீனியர்.. நாளை மேஜர் முடிவு?
சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கு பெற தீவிரமாக முயல்கிறது எஸ்.பி வேலுமணி தரப்பு. வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளை நம்புவதை விட, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவது ஆரோக்கியமானதாக இருக்கும். இல்லையெனில், நிம்மதியாக நாம் ஆட்சி நடத்த முடியாது என அமைச்சர்கள் முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கின்றனராம்.
அதிமுகவில் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை வீழ்த்தி அவரிடமிருந்து அதிமுகவை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம். இவரது தலைமையில் தொடர்ச்சியாக 34 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி ஆலோசனை நடத்தி தவெகவுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்தனர்.

நேற்று 10 ஆம் தேதி நடந்த ஆலோசனையில், தவெகவுடன் கூட்டணி வைக்கிறோம். ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையில் 50 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம். முக்கிய தலைவர்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என விஜய்யிடம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, அன்பழகன், டாக்டர் விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் ஆகிய ஐவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என செங்கோட்டையன் மூலமாக கேட்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் விஜய் தரப்பில் பரிசீலித்து வருகின்றனர். 12 ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் இதில் ஒரு முடிவை சொல்ல வேண்டும் என செங்கோட்டையனிடம் தெரிவித்திருக்கிறார் எஸ்பி வேலுமணி. அதற்கு செங்கோட்டையன், இது குறித்து முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசிக்கிறார். எங்களின் கருத்துகளையும் கேட்டறிந்திருக்கிறார். நாங்கள் பாசிட்டிவ்வாகத் தான் சொல்லியிருக்கிறோம் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.
வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளை நம்புவதை விட, அதிமுகவின் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவது ஆரோக்கியமானதாக இருக்கும். இல்லையெனில், நிம்மதியாக நாம் ஆட்சி நடத்த முடியாது. அதனால் அதிமுக ஆதரவை பெறுவதில் தீர்க்கமான முடிவை எடுங்கள் என்று முதல்வர் விஜய்யிடம் அழுத்தம் தந்துள்ளனாராம் தவெக அமைச்சர்கள் சிலர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications