அவர்களை பற்றி பேசினாலே இந்த டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.. ஸ்டாலின் குறித்து விஜய பிரபாகரன்
Recommended Video

சென்னை: வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்று நான் பேசமாட்டேன். இவர்களை பற்றி பேசினாலே இந்த வார்த்தை தான் ஞாபகம் வருகிறது என்று ஸ்டாலினை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கிண்டல் செய்தார்.
அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தேமுதிக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி வடசென்னை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
வட சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து சென்னை கொளத்தூரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விஜயபிரபாகரன்
முன்னதாக தேர்தல் பணிமனை அப்பகுதியில் திறந்து வைத்தார். பின்பு திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் விஜயபிரபாகரன் ஈடுபட்டார்.

சிறப்பு
அப்போது அவர் பேசுகையில் வடசென்னை என்றாலே திமுக கோட்டை என்கிறார்கள். அந்த கோட்டையை அகற்றுவதே இந்த கூட்டணியின் சிறப்பு.

காலரை தூக்கிவிட்டு
அவர்களின் கோட்டையை தகர்த்து நமது ராஜ்ஜியத்தை படைப்பது தான் நமது ஸ்டைல். நான் எம்.எல்.ஏ. என்று காலரை தூக்கி விட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச வரவில்லை. மன்னிக்கவும் அவர்களை பற்றி பேசினாலே இந்த டயலாக்தான் ஞாபகம் வருகிறது என்று கூறியுள்ளார்.

நாவடக்கம் இல்லாத மகன்
இதுபோல் தேமுதிக கூட்டணி குறித்து பேசி வந்த போது அதிமுகவுடன் இழுபறி நீடித்தது. அப்போது திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். அப்போது தேமுதிகவுக்கு வாக்கு வங்கியே இல்லை என சில கட்சியினர் பொது வெளியில் பேசினர். இதை கண்டிக்கும் வகையில் தேமுதிகவுக்கு வாக்கு வங்கி இல்லாவிட்டால் ஏன்டா என் வீட்டு வாசல்ல வந்து நிக்கறீங்க என்று விஜயபிரபாகரன் நாவடக்கம் இல்லாமல் பேசியது குறிப்பிடத்தக்கது.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications