Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்றியே இல்லாத பெண்தான் விஜயதரணி; சீமான் ஒரு சிவாஜி: ஈவிகேஎஸ் இளங்கோவன் தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியை விட்டு விஜயதரணி சென்றது எங்கள் கட்சிக்குத்தான் நல்லது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய விஜயதரணி இரண்டு வாரங்கள் முன்னதாக சென்னையில் நடந்த கூட்டத்தில் தனக்கு ஆறு மாதங்களாகியும் இன்னும் பதவி தரவில்லை என்று கவலையாகப் பேசி இருந்தார். பொது மேடையில் அவர் உட்கட்சி விவகாரத்தைக் கிண்டலாகப் பேசுவதைப் போல பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது பேச்சை மேடையிலிருந்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பலர் ரசிக்கவில்லை.

vijayadharani evks elangovan

ஆனால், தமிழிசை செளந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அவருக்குப் பதவி விரைவில் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதன்பின்னர் விஜயதரணி அளித்த பேட்டியில் பொன் ராதாகிருஷ்ணனால் தனக்கு எம்பி சீட் கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவர் அவர். பல ஆண்டுகளாக பாஜகவில் பல முக்கிய பதவிகளை வகித்தவர். அவரை தனக்குப் போட்டியாக வைத்து விஜயதரணி பேசியதைச் சொந்தக் கட்சிக்காரர்களைத் தாண்டி எதிர்க்கட்சியினரே ரசிக்கவில்லை.

இப்போது விஜயதரணி காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியது தொடர்பாகப் பேசி உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், அவர் கட்சியை விட்டுப் போனது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என்று கூறியுள்ளார். மேலும் விஜயதரணி காங்கிரஸ் கட்சிக்கு நன்றியாக இல்லை என்றும் பேசியுள்ளார்.

இளங்கோவன் அளித்துள்ள பேட்டியில், "பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணி காணாமல் போய்விட்டார் என்றே நினைத்தேன். சில நாட்கள் முன்னதாக தான் அவர் பெயர் வெளியே அடிப்பட்டது. காங்கிரசில் அவருக்கு அதிக மரியாதை கொடுத்து வைத்திருந்தோம். அதை உதறிவிட்டுப் போனார். தெலங்கானா ஆளுநராக இருந்த பதவியை உதறிவிட்டு, எம்பி தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி ஆகலாம் என தமிழிசை வந்தார். அவர் கனவும் பலிக்கவில்லை. அதைப்போலே விஜயதரணி பாஜகவுக்குப் பெரிய எதிர்பார்ப்புடன் போனார். ஒருவிதத்தில் விஜயதரணி காங்கிரசை விட்டுப் போனது கட்சிக்கு நல்லது. அவர் ஒரு கலகம் செய்யும் பெண்மணி. தேவை இல்லாமல் ஏதேனும் சிண்டு மூட்டி விடுவார். ஒரு கட்சிக் கட்டுப்பாட்டுடன் செயல்படமாட்டார். அவர் கட்சியை விட்டுச் செய்தது எங்களுக்கு நல்லதுதான்.

அவர் ஒரு அதிகப்பிரசங்கி. அவர் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை வருடங்கள் இருக்கும்? அவரைவிட மூத்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பதவி இவருக்குக் கிடைத்தது. அவருக்குக் கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு கட்சியை வளர்த்திருக்க வேண்டும். அப்படி எதையும் அவர் செய்யவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. அங்கே நிறையப் பெண் நிர்வாகிகள் உள்ளனர். இப்போது தாரகை என்பவர் எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். அவர் 30 ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறார். கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருக்கே உரிய அங்கீகாரம் இப்போதுதான் கிடைத்துள்ளது.

விஜயதரணி காங்கிரஸ் கட்சிக்கு மணி சங்கர் அய்யர் மூலமாகத்தான் வந்தார். வந்த உடனேயே அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். மகிளா காங்கிரஸ் தலைவி பதவி கொடுத்தார்கள். காங்கிரஸ் இவ்வளவு செய்தும் அவர் கட்சிக்கு நன்றி இல்லாமல் இருந்துவிட்டார். இப்படிச் சொல்வதால் மன்னிக்க வேண்டும். ஆனால், அதுதான் உண்மை. அவர் காங்கிரஸில் தொடர்ந்திருந்தால் கட்சிக்குப் பெரிய தலைவலியாக இருந்து இருப்பார். பொன் ராதாகிருஷ்ணன் பல ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறார். என் கொள்கைக்கு மாறானவராக இருந்தாலும் அவர் நாகரிகமான நண்பர். அவர் பாஜக பெரிய அளவில் வளராத காலத்திலிருந்தே கட்சியில் இருக்கிறார். அவருடன் விஜயதரணியை ஒப்பிடுவது தவறு" என்று கூறியுள்ளார்.

vijayadharani evks elangovan

தொடர்ந்து பேசிய இளங்கோவன், "அதிமுக வாக்கு வங்கி அப்படியே இருக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகமாக உள்ளது. ஆனால், 90% தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. அதிமுகவின் செயல்பாடு சரியாக இல்லாத காரணத்தால் அதன் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது எனது கருத்து. பாஜகவிலிருந்து அதிமுக வெளியேறிய பிறகு அண்ணாமலையைத்தான் விமர்சிக்கிறார்கள். பாஜகவின் மத எதிர்ப்பு பற்றியோ, மதவெறி கொள்கைகள் பற்றி அதிமுக எதையும் பேசுவதே கிடையாது. எனது பார்வையில் அதிமுக அண்ணாமலையைத்தான் எதிர்கிறது. பாஜகவை எதிர்க்கவில்லை என்றே சொல்வேன்" எனக் கூறியுள்ளார்.

இளங்கோவன் சீமானைப் பற்றியும் நாதக பற்றியும் பேசும்போது, "சீமான் மீது எனக்கு ஒரு பாசம் இருக்கிறது. ஆனால்,அவரிடம் ஒரு நிலையான கொள்கை கிடையாது. பல முறை பெரியாரைப் புகழ்ந்து பேசி இருக்கிறார். பல முறை இழந்தும் பேசி இருக்கிறார். நிலையாக ஒரு அரசியல் எதிர்ப்பு என்பது அவரிடம் இல்லை. வீரபாண்டி கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனத்தைப் போல ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். அவரால் நீண்ட நாள் அரசியலில் இருக்க முடியாது. 18 வயது முதல் 20 வயது உள்ள இளைஞர்கள் அவருடன் இணைவார்கள். இரண்டு ஆண்டுகள் அவரை கட்சியில் தொடர்வார்கள். பின் அவரது செயல்பாடு புரிந்ததும் போய்விடுவார்கள்.

தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்துக் கொண்டு பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் என்ன பலன்? ஆரம்பத்தில் நாதகவில் இருந்தவர்கள் இப்போது யாரும் இல்லை. போய்விட்டார்கள். இப்போது புதியதாக வருபவர்கள் 2 வருடம் கழித்து வெளியேறிவிடுவார்கள். எனவே அவரால் அரசியலில் நீடிக்க முடியாது" என்று பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+