Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறும் எரியுது.. கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் கொந்தளித்த விஜயகாந்த்!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது என சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

50 விலை அதிகரிப்பு

50 விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1118.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 1070.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த HP நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1120.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தேர்தலால் 3 மாதங்கள்

தேர்தலால் 3 மாதங்கள்

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

வயிற்றெரிச்சல்

வயிற்றெரிச்சல்

சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலிண்டர் விலை ஏற்கனவே பலமடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலை மீது சுமையை ஏற்றுவது நியாயமா? ஏற்கனவே, பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை உயர்வால் அத்திவாசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

தற்போது எரிவாயு சிலண்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். சிலிண்டருக்குரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இவ்வாறு மத்திய மாநில அரசுகள் நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றி துளியளவும் சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறன். சிலிண்டர் விலைவாசி உயர்வு அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய செய்திருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+