பேசாமல் கொடுப்பதை வாங்கிக்குவோமா.. இல்லை தனியா நிப்போமா.. கட்சியினருடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை
தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக, திமுக என்ற இரு அணிகளின் கீழ் பிரதான கட்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஏறத்தாழ கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரங்கள் சம்பந்தமாக இரு கட்சிகளுமே இன்று அல்லது நாளைக்குள் தங்களுடைய இறுதி அறிவிப்பினை வெளியிடும் நிலையில் தயாராக உள்ளன.
ஆனால் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சு விஜயகாந்த் அமெரிக்காவில் இருக்கும்போதிருந்தே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இது சம்பந்தமான கேள்விகளை கேட்டாலும், முதலில் விஜயகாந்த் வரட்டும் என்றுதான் கட்சிகள் பதிலளித்தன.
[Read This: அதிமுக கூட்டணியிலேயே செட்டிலாகி விட விஜயகாந்த் முடிவு?.. 5+1 சீட்டுக்கு சம்மதம்??]

திமுக, அதிமுக
அதற்கேற்றார்போல் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், ஓரிரு நாளில் கூட்டணி முடிவாகும் என்று சொல்லப்பட்டது. தமிழக அரசியல் களமும் பரபரப்பும், அனலும் தகித்தது. ஆனால் அவ்வளவும் இப்போது அடங்கி போய்விட்டது. இதில் அதிமுகவும் விஜயகாந்த்தை கண்டுகொள்ளாத நிலையில், தேமுதிக கேட்ட தொகுதிகளை தர முடியாத நிலை என்பதால் திமுகவும் கூட்டணி கதவை இழுத்து மூடியதாக சொல்லப்பட்டது.

கூட்டணி குழப்பம்
இந்நிலையில், தேமுதிக என்ன முடிவு எடுக்கும், அதிமுக தர உள்ள தொகுதிகளை பேசாமல் வாங்கி கொள்ளுமா? அல்லது 3-வது அணி உருவாகும் என்று சொன்ன கமலுடன் சேர முயற்சி மேற்கொள்ளுமா? அல்லது எப்போதுமே நல்ல தொடர்பில் உள்ள டிடிவி தினகரனுடன் இணைய வாய்ப்பு ஏற்படுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற குழப்பம் நிறைந்த கேள்விகள் இப்போது எழுந்துள்ளது.

அவசர ஆலோசனை
இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக தேர்தல் பணிக்குழுவுடன் விஜயகாந்த் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

முதல் கூட்டம்
அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பி இதுவரை மக்களையும், செய்தியாளர்களையும் விஜயகாந்த் சந்திக்காமல் உள்ளார். இப்போது நாடு திரும்பி முதல்முறையாக இந்த கூட்டத்தில் விஜயகாந்த் நேரடியாக பங்கேற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications