சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கூட்டணியிலேயே செட்டிலாகி விட விஜயகாந்த் முடிவு?.. 5+1 சீட்டுக்கு சம்மதம்??

அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை- வீடியோ

    சென்னை: ஆக கடைசியில் அதிமுக., கூட்டணியிலேயே அங்கம் வகிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் சூடாக வந்து கொண்டிருக்கின்றன.

    விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்ததில் இருந்தே கூட்டணி பேச்சுவார்த்தை பிஸியாக நடந்து வருகிறது. அப்போது பாமகவுக்கு 7 +1 ஒதுக்கப்பட்டதால் அதை விட ஒரு தொகுதியாக கூடுதலாக வேண்டும் என்று தேமுதிக அதிமுகவுக்கு கண்டிஷன் போட்டது. ஆனால் இதற்கு எடுத்த எடுப்பிலேயே அதிமுக மறுப்பு சொல்லிவிட்டது.

    இதனால் திமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் திருநாவுக்கரசரை தூது அனுப்பி அதில் எந்தவித பலனும் இல்லாததால் நேரடியாகவே அக்கட்சி தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார்.

    [Also Read: பேசாமல் கொடுப்பதை வாங்கிக்குவோமா.. இல்லை தனியா நிப்போமா.. கட்சியினருடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை ]

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    ஆனால் அதிலும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் தேமுதிகவை சரிகட்ட திமுகவால் முடியவில்லை. 3 சீட் தர முடியும் என்று கறாராக சொல்லி கூட்டணி கதவையும் அடைத்தது.

    பியூஷ் கோயல்

    பியூஷ் கோயல்

    இந்த சூழ்நிலையில், தேமுதிகவுக்கு 5 +1 தொகுதிகள் தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் விஜயகாந்த்தை இழக்க பாஜக கொஞ்சமும் விரும்பவில்லையாம். அதனால் சுதீஷ், பிரேமலதாவிடம் பியூஷ் கோயல் திரும்பவும் கூட்டணியில் இணைவது குறித்து பேசியே வந்தாராம். இதனை பிரேமலதாவும், சுதீஷூம் விஜயகாந்திடம் எடுத்து சொல்லி வந்திருக்கிறார்கள். இப்போது கடைசியாக அதிமுக கூட்டணியில் சேரவும் விஜயகாந்த் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

    பலத்தை காட்ட முடிவு

    பலத்தை காட்ட முடிவு

    அநேகமாக அதிமுக-தேமுதிக இடையே நாளை மறுநாள் அதாவது 3-ம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. இதையடுத்து வரும் 6-ம் தேதி பிரதமர் சென்னையில் பிரச்சாரத்திற்கு வர உள்ளார். அப்போது அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், தமாகா என ஒட்டுமொத்தமாக கூட்டணி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.

    22 தொகுதிகள்?

    22 தொகுதிகள்?

    அப்படி என்றால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7, என்ஆர்.1, தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டால் மீதம் இருப்பது 22 தொகுதிகள். இதில் தமாகா சார்பில் வாசன் வந்தால் 1 தருவது.. இல்லையென்றால் 22 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது.

    ஸ்டாலின்-விஜயகாந்த்

    ஸ்டாலின்-விஜயகாந்த்

    ஆக கடைசியில், இந்த முறையும் தேமுதிகவை கூட்டணியில் இடம் பெற செய்ய திமுகவால் முடியாமல் போய்விட்டது. அதனால் வரும் தேர்தலில் திமுகவை சகட்டு மேனிக்கு திட்டி விஜயகாந்தின் பிரச்சாரம் இருக்க போகிறதா? அல்லது 2-வது முறை தன் கூட்டணிக்கு வராமல் போய்விட்டாரே என்று விஜயகாந்த்துக்கு எதிரான திமுக பிரச்சாரத்தை மேற்கொள்ள போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    The DMDK is said to have decided to put up with the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X