Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் களம் தமிழ்நாட்டில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிடப்போகும் தேர்தல் அறிக்கை, அரசியல் அரங்கில் ஒரு பெரும் "அதிர்வை" (Banger) ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகளை திமுக வாக்குறுதிகளாக கொடுக்கும் என்று கூறப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது லட்சியத் திட்டங்களை திமுக மிக பிரம்மாண்டமாகத் தயார் செய்து வருகிது .

gold rate silver investment

திட்டம்: செயற்கை நுண்ணறிவு மற்றும் நேரடி கள ஆய்வு

தேர்தல் அறிக்கையை நவீனப்படுத்த, திமுக ஒரு பிரத்யேக AI (செயற்கை நுண்ணறிவு)
இணையதளத்தையும் மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து நேரடியாகக் கருத்துகளைப் பெற்று வருகிறது. இந்தப் பணிகளை கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவி கனிமொழி கருணாநிதி தலைமையிலான உயர்மட்டக் குழு முன்னெடுத்து வருகிறது.

இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தற்போது 38 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது

திமுக இன்னும் திறக்க வேண்டிய "பண்டோரா பாக்ஸை" திறக்கவே இல்லை.. அதை திறந்ததும் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த நெருக்கடி வேறு எதுவும் இல்லை.. ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என்கிறார்கள்.

அதாவது 2026 தேர்தலுக்காக அவர்கள் கொடுக்க போகும் வாக்குறுதிகள் கண்டிப்பாக எடப்பாடி, விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பை பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.

1. பெண்களுக்கான புதிய திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.

2. முக்கியமான பல இலவச திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.

3. இளைஞர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் திட்டமிட்டு வரப்படுகிறது.

4. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ஐ முன்னிட்டு பல புதிய நலத்திட்டங்களை ஆளும் திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளும் வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கு நலத்திட்டங்கள், புதிய இலவசங்கள் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவது மட்டுமன்றி.. கூடுவே கூடுதலாக பலரை இணைப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும். அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட தங்க நகை கடன் தள்ளுபடி தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த சில வாரங்களாக நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான 'தேர்தல் கணக்கு' ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது.

5 சவரன் 'மேஜிக்' நம்பர்!

பொதுவாக அவசரத் தேவைக்காகவே மக்கள் நகைகளை அடகு வைப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் (Manifesto) "நகைக்கடன் தள்ளுபடி" எனும் அஸ்திரத்தைக் கையில் எடுக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறியுள்ளது.

குறிப்பாக, பெரும்பாலானோர் 5 சவரனுக்கு மிகாமல் (சுமார் 40 கிராம்) நகைகளை அடகு வைக்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த முறை திமுக அரசு 5 சவரன் வரை தள்ளுபடி செய்ததை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த முறையும் அதே 'லிமிட்' நிர்ணயிக்கப்படலாம் என மக்கள் கணக்குப் போடுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் 'வாக்குறுதி' யுத்தம்

தமிழக அரசியலில் தள்ளுபடி கலாச்சாரம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.

2021-ல் அதிமுக 6 சவரன் தள்ளுபடி என அறிவிக்க, ஆட்சியைப் பிடித்த திமுக 5 சவரன் தள்ளுபடி திட்டத்தைச் செயல்படுத்தியது.

தற்போது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வும், ஆளுங்கட்சியான திமுக-வும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

இதனை மோப்பம் பிடித்த பொதுமக்கள், "யார் ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டுக்காக 5 சவரன் லோனை தள்ளுபடி செஞ்சுதான் ஆகணும்" என்கிற மனநிலையில் வங்கிகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

வங்கிகளில் நிலவும் சூழல்

இது குறித்து கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வழக்கமான வாடிக்கையாளர்களைத் தவிர, இப்போது புதிதாகக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது. நகையை அடகு வைக்கும்போதே, 'இது தள்ளுபடி லிஸ்ட்ல வருமா சார்?' என்று வெளிப்படையாகவே கேட்கிறார்கள்," எனத் தெரிவித்தார்.

இருப்பினும், அரசு தள்ளுபடி செய்யும்போது ஆதார் எண், குடும்ப அட்டை மற்றும் 'ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தள்ளுபடி' போன்ற கடுமையான விதிகளைப் பின்பற்றுவதால், பல இடங்களில் மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தனித்தனியாகக் கடன் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர்களின் எச்சரிக்கை

இந்த 'அடகு வியூகத்தை' ஒரு சாமர்த்தியமான முதலீடாகவே சாமானிய மக்கள் பார்க்கிறார்கள். சந்தையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் வேளையில், கூட்டுறவு வங்கிகளில் நகையை வைத்துப் பெறும் பணத்தை மற்ற தொழில்களிலோ அல்லது அதிக ரிட்டர்ன் தரும் இடங்களிலோ முதலீடு செய்கின்றனர். ஒருவேளை தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், வாங்கிய அசல் தொகையும் கையில் தங்கும், நகையும் ஓசியில் மீட்கப்படும்; இது கிட்டத்தட்ட 'நூறு சதவீத லாபம்' தரும் ஒரு லாட்டரி சீட்டு போன்றது. தள்ளுபடி கிடைக்காவிட்டாலும் கூட, வெளிச்சந்தையை விட கூட்டுறவு வங்கிகளில் வட்டி குறைவு என்பதால், இது ஒரு பாதுகாப்பான 'பேக்-அப்' பிளானாகவே மக்களால் கருதப்படுகிறது.

ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் என்பது அரசியல் சூழலைப் பொறுத்தது. ஒருவேளை தள்ளுபடி அறிவிக்கப்படாவிட்டால், அபராத வட்டியுடன் நகையை மீட்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+