தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார்
திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தவெக விஜய்யை கூட்டணிக்குள் இழுப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. இது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எங்கள் கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பில்லை என சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக 23 கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தன் ஆகியோரும் திமுகவுடன் இணைந்துள்ளனர். பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகளும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர் [BJP Sarathkumar].

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக
தவெக பக்கம் தாவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியை விட்டு விலகவில்லை. அதேநேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ஆதரவு பாமக மற்றும் பாஜக தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு வேறு எந்த பெரிய கட்சிகளும் இணையவில்லை.
தவெக காங்கிரஸ் கூட்டணியானால் சிறுபான்மை வாக்குகள் பிரிந்து தாங்கள் வெற்றி பெறலாம் என கணக்கிட்ட அதிமுக பாஜக கனவும் கனவாகவே போய்விட்டது.
இதன் காரணமாக தவெகவை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. கரூர் கூட்டம் நெரிசல் தொடர்பாக விஜய்க்கு அடுத்தடுத்து சம்மன், ஜனநாயகன் படம் பிரச்சனை என நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். விஜய்யிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். இந்நி ல◌யில் பிரதமர் நரேந்திரே மோடி இன்று திருச்சி வருகிறார். அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பாஜக வலிமையான கூட்டணி
இதுகுறித்து பாஜக சரத்குமார் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தமிழ்நாடு வருகிறார். மிகப்பெரிய மாற்றங்கள், அதிசயங்கள் நிகழும். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு. மத்திய அரசுடைய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதை எல்லாம் எடுத்து சென்று நாங்கள் பிரச்சாரம் செய்வோம்.
மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் அவர் வருகிறார் . தமிழ்நாட்டை வளமாக்குவதற்காக பிரதமர் பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியுள்ளனர். இந்த கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. அதற்கு நாங்கள் எல்லோரும் வேலை செய்ய போகிறோம். எங்களின் தேர்தல் பிரச்சாரம் வலுவாக இருக்கும்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நானும் முகம் எல்லாம் கழுவி இப்போது பிரகாசமாகிவிடுவேன்.
விஜய் வாய்ப்பில்லை
என் அன்பு சகோதரர் சீமான் எப்போதுமே யாருடனும் வைக்க மாட்டார். அதனால் வேட்பாளர்களை முன்பே தேர்வு செய்து அறிவித்துவிடுவார். பாஜகவிலும் பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் அறிவித்துவிடுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்று எனக்கு தெரியவில்லை. அதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications